twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்புன்னா சொல்லுங்கய்யா... டமார்னு மன்னிப்புக் கேட்கிறேன்... இளம் ஹீரோ ரெடி

    By
    |

    கொச்சி: தான் தவறு ஏதும் செய்திருந்தால் பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்று மலையாள ஹீரோ ஷேன் நிகம் தெரிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவின் இளம் ஹீரோ, ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

    வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
    ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தனது தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    இதனால் வெயில் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.

    நடிக்கத் தடை

    நடிக்கத் தடை

    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, திடீரென புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர்.

    ரூ.7 கோடி தரவேண்டும்...

    ரூ.7 கோடி தரவேண்டும்...

    அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் திருப்தித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இந்நிலையில், இந்தப் பிரச்னையை பேசித் தீர்க்க, மலையாள நடிகர்கள் சங்கமான, அம்மாவும் கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தி நடத்தியது.

    தரக்குறைவு பேச்சு

    தரக்குறைவு பேச்சு

    இதற்கிடையே தயாரிப்பாளர்களை ஷேன் நிகம் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. இதனால் கோபமான கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, தடை தொடரும் என்று அறிவித்தனர்.

    மன்னிப்புக் கேட்கத் தயார்

    மன்னிப்புக் கேட்கத் தயார்

    இதற்கிடையில் எப்.எம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மன்னிப்புக் கேட்டால் பிரச்னை முடிந்துவிடும் என்று தெரிந்தால் அதை தாராளமாகக் கேட்கிறேன் என்ற நிகம், தன் மீது தயாரிப்பாளர்கள் கிரிமினல் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறப்படுவதற்கு வருத்தம் தெரிவித்தார்.

    English summary
    actor Shane Nigam said that he is willing to apologize publicly if there was any mistake from his part.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X