’தளபதி 64’ல் ஸ்பெஷல் வெப்பன் வருமா.. லோகேஷை கலாய்த்த ’ஆடை’ இயக்குநர்!

Recommended Video

Thalapathy 64 | Rathnakumar trolls Lokesh kanagaraj | லோகேஷை கலாய்த்த ’ஆடை’ இயக்குநர் ரத்னகுமார்

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியான கைதி படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சமீபத்தில் 100 கோடி வசூலை தாண்டிய கைதி படம் பலரது பாராட்டுக்களை பெற்று வெற்றி நடை போடுகிறது.

கைதி படத்தை தாமதமாக பார்த்த கார்த்தி சுப்பராஜும் படம் குறித்து புகழ்ந்துள்ளார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கைதி

கைதி

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா, பேபி மோனிகா, மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி கைதி படம் வெளியானது. சுமார் 800 கிலோ போதை மருந்தை பிடித்த போலீசாரை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கும் போதை கும்பல் கூட்டத்தை ஆயுள் தண்டனையில் இருந்து வெளிவந்து தனது மகளை பார்க்க போராடும் ஒரு கைதி எப்படி அழித்து போலீசாரை காப்பாற்றினான் என்பது தான் கைதியின் கதை.

முதல்முறை

முதல்முறை

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தியின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக கைதி மாறியுள்ளது. வரும் டிசம்பரில், அண்ணி ஜோதிகாவுடன் கார்த்தி நடிக்கும் தம்பி படம் வெளியாகவுள்ளதால், கார்த்தியின் மார்க்கெட் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொசு மருந்து மிஷின்

தீபாவளி விருந்தாக வெளியான கார்த்தியின் கைதி படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய மக்களுக்கும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ள லோகேஷ் கனகராஜ், அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி என மிஷின் கன்னுடன் கார்த்தி நிற்கும் கார்ட்டூனையும் பகிர்ந்துள்ளார்.

தளபதி 64ல் என்ன வெப்பன்

லோகேஷ் கனகராஜின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ‘ஆடை' பட இயக்குநர் ரத்னகுமார், அப்படியே, 'தளபதி 64' கிளைமேக்ஸ்ல என்ன ஆயுதம் வரப்போகுதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும் என லோகேஷை நட்பு ரீதியாக கலாய்த்துள்ளார் ரத்னகுமார்.

தளபதி 64

தளபதி 64

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நட்சத்திர பட்டாளத்தையே வைத்து இயக்கி வரும் தளபதி 64 படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஆச்சர்யமூட்டும் திரைக்கதை காட்சிகளும், விஜய்யின் மாஸ் மற்றும் விஜய்சேதுபதியின் ஆக்டிங் என வேற லெவலில் படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X