அச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி?
Recommended Video
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிநடை போடுகிறது.
பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி ஹாலிவுட் படத்தின் காட்சியில் இருந்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் ஒரு வீடியோ க்ளிப் வைரலாகி வருகிறது.

காப்பி டைரக்டர் என உங்களை விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த இயக்குநர் அட்லி, தான் பார்த்த இரண்டாயிரத்திற்கும் மேலான படங்களின் இன்ஸ்பிரேஷன் தனது படங்களில் இருக்கும் என பதிலளித்தார்.
பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கடந்த ஆண்டு வெளியான 'The Miracle Session' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்குமோ என்ற கேள்வியை சினிமா ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
ரவுடியாக இருக்கும் மைக்கேல் விஜய், தனது நண்பர் கதிர் கத்திக்குத்துப் பட்டு மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக மாறுவார்.
ரவுடியை கோச்சாக ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், அந்த வீராங்கனைகள் செய்யும் அலப்பறைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சியில், கோல் போஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதிக்குள் கோல் போடும் செட்டப்பை மைக்கேல் விஜய் செய்து வைத்திருப்பார்.
கால்பந்தாட்ட வீராங்கனைகள் அந்த இடத்தில் கோல் போட முடியாமல், கிரவுண்டில் ஓடும் பனிஷ்மென்ட்டை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இறுதியாக தென்றல் எனும் அணியின் கேப்டன் அந்த கோலை கச்சிதமாக அடிப்பார். அவரை தொடர்ந்து மற்ற பெண்களும் அடிப்பார்கள்.
அணியின் தோல்விக்கும் வெற்றிக்கும் ஒவ்வொருவரும் காரணம் என்ற தத்துவத்தை விஜய் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு பயிற்சியளிப்பார்.
அச்சு அசல் அதே போன்றதொரு காட்சி சீன் மெக்னாமரா இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான 'The Miracle Session' எனும் ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது ஃபுட்பால், அது வாலி பால்.
வழக்கம் போல விஜய் ஹேட்டர்ஸ் இந்த காட்சியையும் வைரலாக்கி விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications