செஞ்சுட்டா போச்சுன்னு சொன்ன அட்லி.. பிகில் 2வும் உருவாகிறதா?

பிகில், ராயப்பனின் இளம் வயது கதையை ப்ரீக்வலாக எடுக்க வேண்டும் என்ற ரசிகர் ஒருவரின் ட்வீட்டுக்கு செஞ்சுட்டா போச்சு என அட்லி பதிலளித்துள்ளார்.

Recommended Video

Bigil Box Office:முதல் நாள் சாதனைபடைத்த பிகில்

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள படம் பிகில். இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிகில் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில், பிகில் 2 உருவாகுமா என்ற கேள்வியும் அதற்கு அட்லியின் அதிரடி பதிலும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸ்

சுமார் 1500 திரையரங்குகளுக்கு மேல் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பிகில் வெளியான இரண்டாவது நாளிலே 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து ஏஜிஎஸ் நிறுவனமோ, அர்ச்சனா கல்பாத்தியோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி நாளான இன்று மற்றும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாளை வரை பிகில் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் புக்கிங்காக உள்ளதால், நிச்சயம் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை பிகில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதி 2

கைதி 2

இந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி படமும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்த்தியின் கைதி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், கைதி 2 வருமா என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியது. லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கைதி 2 வரும் என தெரிவித்துள்ளனர்.

பிகில் 2

பிகில் 2

ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என தளபதி விஜய் மூன்று கெட்டப்புகளில் சுமார் 3 மணி நேரம் பிகில் படத்தில் நடித்து தள்ளியுள்ளார். இந்நிலையில், கைதி 2 போலவே பிகில் 2வும் வருமா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

ராயப்பன்

அசாருதின் எனும் விஜய் ரசிகர், நேரடியாக அட்லியின் ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தில் பலரையும் கவர்ந்த விஜய்யின் வயசான அப்பா கெட்டப்பான ராயப்பன் கதாபாத்திரத்தின் ப்ரீக்குவல் வருமா என கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக, செஞ்சுட்டா போச்சு என இயக்குநர் அட்லி பதிலளித்துள்ளார்.

இதன்மூலமாக பிகில் 2 திரைப்படம் உருவானால், அதில், ராயப்பனின், இளமையான நாட்களையும் அவர் ஏன் தாதாவானார் என்ற கதையும், அவருக்கான ஜோடி யார் என்ற ரகசியமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X