வெளியே வந்தா இன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி!

சென்னை: ஹேமந்த் வெளியே வந்தால் இன்னும் பல பெண்களை ஏமாற்றுவார் என்று அவரது நண்பர் ரோஹித் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Chithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.

தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர் ஹேமந்த்தான் என்பது தெரியவந்துள்ளது.

நண்பர் எதிர்ப்பு

நண்பர் எதிர்ப்பு

ஹேமந்த் தனக்கு பெயில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவரது நண்பரான ரோஹித், ஹேமந்த் பல பெண்ணுகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்தார். மேலும் சித்ராவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என கூறியிருந்தார்.

சித்துவுக்கு செய்த கொடுமைகள்

சித்துவுக்கு செய்த கொடுமைகள்

ஹேமந்தின் நண்பரே அவருக்கு எதிராய் மனுத்தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரோஹித் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சித்ராவுக்கு ஹேமந்த் செய்த கொடுமைகளை எல்லாம் பட்டியலிட்டுள்ளார்.

கடைசியா மசினகுடி போனோம்

கடைசியா மசினகுடி போனோம்

அவர் பேசியிருப்பதாவது, அவர்களுக்குள் சண்டைன்னா நாங்க பேசி தீர்ப்போம்.. ஹேமந்த் ரொம்ப டார்ச்சர் பண்ணார்.. கடைசியா நாங்க மசினகுடிதான் போனோம்.. அதுக்கு அப்புறம் எங்களை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்டார். நாங்க பெருசா கண்டுகக்கல.. நானும் பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றேன்.. இந்த கோவிட் டைம்ல எல்லாரும் பிஸியா ஆயிட்டோம்..

கடைத்திறப்பின் போதும்..

கடைத்திறப்பின் போதும்..

அதுலேருந்து ஹேமந்த் கூட அதிகம் பேசல.. மசினகுடி போனப்போ ஷேர் பண்ணிதான் போனோம். அந்த செலவு எல்லாமே சித்துவோடதுதான். அப்போதான் பெரம்பலூர்ல கடைத்திறப்புக்கு போயிட்டு வந்தாங்க. அப்போ ஹேமந்துக்கும் தான் ரூம் போட்டுக் கொடுத்தாங்க.. ஹேமந்த் கூடவேதான் இருந்தார்.

சித்துவுக்கு எவ்ளோ ஃபேன்ஸ்

சித்துவுக்கு எவ்ளோ ஃபேன்ஸ்

அப்போது என்னிடம் என்னடா சித்துவுக்கு இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க.. செல்பி எடுக்குறாங்க.. என்னையே கிட்ட விடலை என்றார். சித்துவுக்கு எவ்ளோ ஃபேன்ஸ் இருந்தாங்க என்பது ஹேமந்துக்கு தெரியும்.

ஜோடியா ட்ராவல் பண்ணலாம்

ஜோடியா ட்ராவல் பண்ணலாம்

பெரம்பலூர்லேருந்து கோயமுத்தூர் புறப்பட்டார்கள். அப்போதான் எனக்கு போன் பண்ணி மசினகுடி போற பிளான் இருக்கு நீ கோயமுத்தூர் வா என்று அழைத்தார். நான் ஆபிஸில் பர்மிஷன் போட்டுவிட்டு சென்றேன். இதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஜோடியா ட்ராவல் பண்ணலாம் என்று நினைத்தேன்.

சொகுசா வாழ்ந்தவர்..

சொகுசா வாழ்ந்தவர்..

அதுக்குள்ள சித்ரா இப்படி பண்ணிக்கிச்சு.. உண்மையா சித்ரா மேல நான் கோபமா இருக்கேன். அவருக்காக இப்படி பண்ணிக்கிச்சு.. கடனை வாங்குறது.. அடைக்கிறது.. ஏமாத்துறது.. இந்த மாதிரி விஷயங்கள்தான் ஹேமந்த்க்கிட்டே இருந்துச்சு. இதெல்லாம் ஜீரணிக்க முடியல.. ரொம்ப சொகுசா வாழ்ந்தவர் ஹேமந்த்.

ஒரு பொண்ண சாகடிச்சுட்டாரு..

ஒரு பொண்ண சாகடிச்சுட்டாரு..

இப்போ ஜெயில்ல எவ்ளோ கஷ்டப்படுவார்ன்னு எனக்கு தெரியும். இந்த கஷ்டத்தை அவர் நீண்ட நாள் அனுபவிக்கணும்.. நொந்து நூடுல்ஸாகி கஷ்டம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொண்ணை சாகடிச்சுட்டாரு.. ஒரு உயிர்ன்னா என்னன்னு தெரியணும்..

சித்துவ தப்பா பேசாதீங்க..

சித்துவ தப்பா பேசாதீங்க..

அவர் பெயில்ல வரக்கூடாது.. வெளியே வந்தா இன்னும் நிறைய பெண்கள ஏமாத்துவார். பொண்ணுங்களும் நடந்ததை எல்லாம் மறந்துடுவாங்க.. நான் பார்த்த வரைக்கும் சித்து ரொம்ப நல்ல பொண்ணு.. சித்துவ பத்தி தப்பா பேசாதீங்க.. அதுக்காகதான் நான் கோர்ட்டுக்கு போனேன்.. இவ்வாறு ரோஹித் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X