நான் திடீரென தற்கொலை செய்து கொண்டாலோ.. மாரடைப்பில் இறந்தாலோ அதற்கு இவங்கதான் காரணம்.. நடிகை கடிதம்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ, அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாலோ அதற்கு இவங்க தான் காரணம் என அதிர்ச்சியளிக்கக் கூடிய கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பது அனைவரையும் ஷாக் ஆக்கி உ ள்ளது.
33 வயதாகும் பாலிவுட்டின் இளம் கவர்ச்சி நடிகை பாயல் கோஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை கிளப்பியதும் இதே பாயல் கோஷ் தான்.

பாயல் கோஷ்
கடந்த 2008ம் ஆண்டு பிபிசி தயாரிப்பில் வெளியான ஆங்கில படமான ஷார்ப் பெரில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாயல் கோஷ். தெலுங்கில் பிரயாணம், ஊசரவெளி, மிஸ்டர் ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த பாயல் கோஷ் கடந்த 2017ம் ஆண்டு பட்டேல் கி பஞ்சாபி ஷாதி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கொய் ஜானே நா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பாலியல் புகார்
நயன்தாரா, விஜய்சேதுபதி, ராஷி கன்னா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது கடந்த 2020ம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார் பாயல் கோஷ். ஆனால், அவர் சொல்லும் நேரத்தில் தான் இலங்கையில் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

1 கோடி தரணும்
அனுராக் காஷ்யப் மீது பாலியல் வழக்கு தொடுத்த பாயல் கோஷ் நடிகை ரிச்சா சத்தாவின் பெயரையும் அதில் இழுத்து விட்ட நிலையில், பாயல் கோஷுக்கு எதிராக 1.1 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கை ரிச்சா சத்தா போட்டதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சர்ச்சைக்கு பிறகு பாலிவுட்டில் பாயல் கோஷுக்கு அதிகமாக பட வாய்ப்புகள் வருவதில்லை.

ஷாக்கிங் லெட்டர்
இந்நிலையில், திடீரென நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷாக்கிங் லெட்டரை பதிவிட்டு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். அவரது பதிவை பார்த்த பலரும் உடனடியாக மருத்துவரையோ, அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள் எல்லாம் சரியாகி விடும் என பதிவிட்டு வருகின்றனர்.

தற்கொலையோ மாரடைப்போ ஏற்பட்டால்
திடீரென நான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவங்க தான் காரணம் என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரிக்கும் விதமாக ஒரு துண்டு சீட்டு கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பாயல் கோஷ்.

ட்ரோல்களை தாங்க முடியல
நடிகை பாயல் கோஷ் எப்போது அனுராக் காஷ்யப் பற்றி வெளிப்படையாக பேசினாரோ அப்போதிருந்தே அவர் மீது ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல்களை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிகமான ட்ரோல்களை தாங்க முடியவில்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பி இருக்கிறார் பாயல் கோஷ்.

கொலை மிரட்டல்
நடிகைக்கு விஷமிகள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனரா அல்லது எந்த பிரபலத்தை குறிப்பிட்டு இப்படியொரு குற்றச்சாட்டை போட்டு உள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் அனுராக் காஷ்யப்பை டார்கெட் செய்து தான் இப்படியொரு கடிதத்தை வெளியிட்டுள்ளாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











