நா டைரக்ட் பண்ண போற படத்துக்கு யோகி பாபுதான் ஹீரோ... ஜெயம் ரவி நெகிழ்ச்சி

சென்னை: இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முதன்மையாக இருப்பவர் யோகி பாபு.

இவருடைய தனித்திறமை என்னவென்றால் நகைச்சுவை கதாபாத்திரங்களை தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களையும் சிறப்பாக செய்யக் கூடியவர்.

இந்நிலையில் யோகி பாபு பற்றி நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ள ஒரு பேட்டி பற்றி இதில் பார்ப்போம்.

 லொள்ளு சபா உறுப்பினர்

லொள்ளு சபா உறுப்பினர்

யோகி பாபு தன்னுடைய திரைப்பட பயணத்தை தொலைக்காட்சியில் இருந்து தொடங்கினார். சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகத்தான் யோகி பாபு நடிக்க வந்தார். அப்போதே அதன் ஸ்கிரிப்ட் பணிகளிலும் இயக்குநர் ராம் பாலாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

 சுந்தர்.சி கண்டுபிடிப்பு

சுந்தர்.சி கண்டுபிடிப்பு

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்திருந்த யோகி படத்தில் தான் முதன் முதலில் நடித்தார். அதனால பாபு என்ற பெயருடன் யோகி என்ற பெயரையும் சேர்த்து யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார். அதன் பிறகு சிறிய படங்களில் நடித்து வந்தாலும் ஏதோ ஒரு படத்தில் கூட்டத்தில் ஒருவராக ஆடிக்கொண்டிருந்தவரை சுந்தர்.சி கவனித்திருக்கிறார். அதன் பிறகு கலகலப்பு படத்தை சுந்தர்.சி இயக்கியபோது அந்தக் கூட்டத்தில் இருந்த பெயர் தெரியாத நபரை அடையாளம் காட்டி தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தாராம். அவர்தான் இப்போதுள்ள யோகி பாபு என்று சுந்தர் சி சமீபத்தில் கூறியுள்ளார்.

 ஹீரோ யோகி பாபு

ஹீரோ யோகி பாபு

பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களில் ஒரு சிலர்தான் கதாநாயகர்களாக வெற்றியை பார்ப்பார்கள், ஆனால் அவர்கள் தேர்வு செய்யும் படங்கள் நகைச்சுவை கலந்ததாகவே இருக்கும். இதற்கு முற்றிலும் வித்தியாசமாக நடிகர் யோகி பாபு சீரியஸான கதாநாயகனாகவும் நடித்த படம்தான் மண்டேலா. இதை தவிர்த்து பரியேறும் பெருமாள், கோமாளி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிக்காட்டினார்.

 ஜெயம் ரவி விருப்பம்

ஜெயம் ரவி விருப்பம்

கோமாளி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே யோகி பாபுவின் நடிப்பை பார்த்து ஜெயம் ரவி வியந்து போனாராம். தனது அண்ணன் மோகன் ராஜா வழியில் தானும் இயக்குநராக ஒரு கதையை எழுதி வைத்துள்ளதாகவும் அந்தக் கதைக்கு சரியான நாயகன் யோகி பாபு என்று கூறியுள்ளார். நகைச்சுவையைத் தாண்டி ஒரு நல்ல குணசித்திர நடிகனாக பிரமாதமாக நடிக்கக் கூடியவர் யோகி பாபு. ஆனால் அதை குறைவாக்கிக் கொண்டு நகைச்சுவையில் மட்டுமே பயணிக்கிறார். கோமாளி படத்தின் போதே,"உன்னை என் படத்தில் நடிக்க வைத்து உனக்குள் இருக்கும் நடிகனை வெளிக்கொண்டு வருகிறேன்" என்று ஜெயம் ரவி யோகி பாபு விடம் கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X