மோகன் ஜி படம்னு தெரிஞ்சிருந்தா பாடியிருக்க மாட்டேன்.. திரெளபதி 2 பாட்டுக்கு சின்மயி விளக்கம்!
சென்னை: 'திரௌபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரௌபதி படத்தின் 2வது பாகத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில், சின்மயின் குரலில்,"எம்கோனே" என்ற இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில், மோகன் ஜி படம் என்று தெரிஞ்சிருந்தா பாடியிருக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை மோகன் ஜி இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் ஓடாமல் போனதால், தலித்தியப் படங்கள் தமிழில் அதிகம் வர, அதற்கு மாறாக நாடகக் காதல் என்ற விஷயத்தின் பக்கம் நின்று படங்களை எடுக்க ஆரம்பித்தார். அப்படி வந்த திரௌபதி படத்துக்கு தலித் பிரிவினருக்கு எதிரான மன நிலையில் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்ததால், தனது ரூட்டை தெளிவாகப் பிடித்துக்கொண்டு ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை எடுத்தார்.

திரௌபதி 2 : தற்போது, மோகன் ஜி, திரௌபதி 2 படத்தை எடுத்துள்ளார். இப்படம்,14 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாகும்,ஹொய்சால அரசர்களின் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றை கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பான் இந்திய திரைப்படம் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. 'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் ரக்ஷனா இந்து நடித்துள்ளார். மேலும், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் முக்கியரோலில் நடித்துள்ளனர்.
பாடி இருக்க மாட்டேன்: ஜிப்ரான் இசையில், சின்மயின் குரலில்,"எம்கோனே" என்ற இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில், மோகன் ஜி படம் என்று தெரிஞ்சிருந்தால், இந்த பாடலை பாடியிருக்க மாட்டேன் என சின்மயி பதிவிட்டுள்ளார். மேலும், எம்கோனே பாடலுக்காக எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரான், நான் ஜிங்கிள் பாடும் நாட்களில் இருந்து கிட்டத்தட்ட 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஒரு இசையமைப்பாளர். அவரது அலுவலகத்தில் இருந்து இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, நான் வழக்கம்போலச் சென்று பாடினேன். நான் அந்த பாடலை பாடும் போது, ஜிப்ரான் அங்கு இல்லை, பாடலுக்கு எப்படி ஸ்வரமாக ஒலிப்பது என்பது குறித்து எனக்கு ஒரு யோசனை வழங்கப்பட்டது. அதன்படி நான் பாடலை பாடிவிட்டு வந்துவிட்டேன். இப்போதுதான் சூழலைப் பற்றி நான் எனக்கு தெரியவந்தது. எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் இந்த பாடலை பாடி இருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. இது முழுமையான உண்மை என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











