கைதி 2வுக்கு இப்பவே வெயிட்டிங்.. லோகேஷின் ஐடியா என்ன?

தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள கைதி படத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கைதி படத்தின் 2ம் பாகம் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.

சென்னை: மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான கைதி திரைப்படம் பல விமர்சகர்களிடையே 5க்கு 4 மதிப்பெண்கள் மேல் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

ஒரே இரவில் நடக்கும் கைதி படம் அதற்குள் முடிந்துவிட்டதா என்றும் மேலும் அடுத்த பாகம் எடுத்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தளபதி 64 படத்தை இயக்க தொடங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இதை கருத்தில் கொள்வாரா என்பது தான் இப்போதைக்கு பில்லியன் டாலர் கேள்வி.

ஹாலிவுட் சாயல்

ஹாலிவுட் சாயல்

கைதி படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், Duel, Departed உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால், ஒரு சில காட்சிகள் தான் அப்படி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக படத்தை பார்க்கும் போது வேறலெவல் மிரட்டலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.

தளபதி 64

தளபதி 64

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். கட்டம் போட்ட சட்டையில் விஜய் ஃப்ரெஞ்ச் தாடி வைத்து நடித்து வரும் கெட்டப் லுக்குகள் இணையத்தில் கசிந்து வருகின்றன. மாநகரம், கைதி படங்களுக்கு விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள தளபதி 64 படத்தின் கதையும் செம்ம க்ரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதி 2 வருமா?

கைதி 2 வருமா?

கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. அவருக்கு மகளாக நடித்திருக்கும் மோனிகா குட்டியும் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார். சிறப்பு போலீஸ் அதிகாரியாக கம்பேக் ஆகியுள்ள நரேன், விஜய் டிவி தீனா என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரே இரவில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் நகர்வதால், கைதியை மீண்டும் காண பல ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கைதி 2 வருமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

மீண்டும் இணைவார்களா?

மீண்டும் இணைவார்களா?

கைதியின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மீண்டும் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி கைதி 2 படத்திற்காக இணைவார்களா என்ற கேள்விக்கு இருவரும் தான் பதில் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன், சுல்தான், ஜோதிகாவுடன் ஒரு படம், ராஜு முருகனுடன் ஒரு படம் என கார்த்தி அடுத்தடுத்து பிசியாக உள்ளார்.

அதேபோல, தளபதி 64 படத்தை இயக்குவதில் லோகேஷ் கனகராஜும் மும்முரமாக இறங்கியுள்ளார். மீண்டும் இந்த கூட்டணி இப்போதைக்கு ஏற்படுமா என்பது கேள்விக்குறி என்றாலும், இணைந்தால் நல்லா இருக்கும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X