Thug Life Box Office: கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகுமா?.. முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?
சென்னை: கர்நாடகா ஃபிலிம் சாம்பர்ஸ் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைஃப்' படத்தை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால் கன்னட நடிகர்கள் படங்கள் ஏதும் தமிழ்நாட்டில் வெளியாகாது என சீமான் பேசியுள்ளார். கர்நாடகாவில் 'தக் லைஃப்' படம் வெளியாகவில்லை என்றால் சுமார் எத்தனை கோடி நஷ்டம் ஏற்படும்? ராஜ் கமல் நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது குறித்து லேசான அலசலையும் தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்பையும் இங்கே காணலாம் வாங்க..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், சிம்பு, அசோக் செல்வன், அபிராமி மற்றும் நாசர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்கோத்ரா 'ஜிங்குச்சா' பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'முத்த மழை' பாடலுக்கு ஏகப்பட்ட ரீல்ஸ்களை போட்டு சின்மயி ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பாடியதை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

கமல்ஹாசன் இந்த படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்த தயாரிப்பாளராகவும் உள்ளார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியா என பல இடங்களுக்கு படக்குழுவுடன் சென்று தக் லைஃப் படத்தை பெரிதளவில் புரமோட் செய்து வருகிறார்.
கர்நாடகாவில் பல லட்சம் வீடுகள் இருக்கு: தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசனின் உருவ பொம்மைகளை செருப்பால் அடித்தும், எரித்தும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் அபிராமிக்கு பெங்களூரில் ஒரு வீடு இருக்கு, ஆனால், எனக்கு இங்கே பல லட்சம் வீடுகள் உள்ளன என கமல்ஹாசன் பாசத்தோடு பேசியுள்ளார். அன்பு என்றுமே மன்னிப்பு கேட்காது என்றும் திட்டவட்டமாக தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால் என்ன ஆகும்?: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் கர்நாடகாவில் அதிகபட்சமாக 26.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் அந்த படம் 430 கோடி வரை வசூல் ஈட்டி கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. இந்தியன் 2 திரைப்படம் 7.5 கோடி ரூபாய் வரை கர்நாடகாவில் வசூல் செய்தது. தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியானால் 20 முதல் 30 கோடி வரை வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போராட்டங்கள் காரணமாக தடை விதிக்கப்பட்டால் பெங்களூரில் இருந்து ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படத்தை பார்ப்பார்கள் என்றும் 20 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், பெரிய பாதிப்பு ஏற்படாது என்கின்றனர்.
தக் லைஃப் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோடும் டிரைலர் அனைத்து இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது. முதல் நாளில் கண்டிப்பாக இந்தியளவில் 35 கோடி முதல் 40 கோடி வரை வசூல் தாராளமாக வரும் என்கின்றனர். பாசிட்டிவ் விமர்சனத்தை பொறுத்து அதன் பின்னர், வசூல் அதிகரிக்கலாம் என்கின்றனர். உலகளவில் 60 முதல் 70 கோடி வரை முதல் நாளில் வசூல் வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைபப்டம் முதல் நாளில் அதிகபட்சமாக 85 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது.


Click it and Unblock the Notifications











