கமல் நடிக்க அழைத்தால் வரத்தயார்..வில்லி ரோல் என்றால் கலக்குவேன்..பிரபல வில்லன் நடிகரின் மகள் ஆவல்

கமல்ஹாசன் நடிக்க அழைத்தால் தாராளமாக வரத்தயார். வில்லி வேடம் என்றால் கலக்குவேன் என பிரபல வில்லன் நடிகரின் மகள் வாய்ப்பு கேட்டுள்ளார்.

சினிமாவில் கடைகோடி மக்கள் வரை தெரிந்த நபர்கள் காலப்போக்கில் காணாமல் போனது வரலாறு.

அப்படி வாய்ப்பில்லாமல் ஒதுங்கிய கவர்ச்சி நடிகை, வில்லன் நடிகரின் மகள் தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

 எம்ஜிஆர் படத்தின் முக்கிய வில்லன் ஜஸ்டின்

எம்ஜிஆர் படத்தின் முக்கிய வில்லன் ஜஸ்டின்

எம்ஜிஆர் படங்களில் முக்கிய வில்லன்களாக வீரப்பா பின்னர் நம்பியார் அதன் பின்னர் அசோகன் என பலர் வந்து கலக்கினர். இவர்களுக்கு அடியாட்களாக ஒரு காலத்தில் சின்னப்பா தேவர் எம்ஜிஆருடன் சண்டை போடுவார், தனிச்சண்டையாக பார்க்க பயங்கரமாக இருக்கும். ரசிகர்கள் ரசிப்பார்கள். அதேபோல் குண்டுமணி எம்ஜிஆர் காம்பினேஷனும் ரசிக்கப்பட்டது. அதன் பின்னர் எம்ஜிஆர்-ஜஸ்டின் தனிச் சண்டை காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆஜானுபாகுவான வில்லனான ஜஸ்டின் எம்ஜிஆருடன் மோதும் படங்களின் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கும்.

 கவர்ச்சி நடிகை பபிதா

கவர்ச்சி நடிகை பபிதா

அப்படிப்பட்ட ஜஸ்டின் எம்ஜிஆர் முதல்வரான பின்னர் அவரது மெய்க்காவலர்களில் ஒருவராக கூடவே இருந்தார். அவ்வப்போது ரஜினி கமல் படங்களில் தலைக்காட்டினார். இவரது மகள் பபிதா கமலின் நாயகன் படத்தில் ஒரு பாட்டில் அறிமுகமானார். நான் சிரித்தால் தீபாவளி பாடல் அது. அதன் பின்னர் பாக்யராஜின் சின்னவீடு படம் அதன் பின்னர் காமெடி, கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். பின்னர் பிரச்சாரம் செய்தார் பின்னர் பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார்.

 கமலிடம் பகீரங்க கோரிக்கை வைத்த பபிதா

கமலிடம் பகீரங்க கோரிக்கை வைத்த பபிதா

தற்போது மீண்டும் படவாய்ப்பு கேட்டு பகீரங்கமாக கமலிடம் கோரிக்கை வைத்துள்ளார், "என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது.

 நாயகன் படத்தில் அந்தப்பாடலை மறக்காத ரசிகர்கள்

நாயகன் படத்தில் அந்தப்பாடலை மறக்காத ரசிகர்கள்

உலக நாயகனின் 'நாயகன்' படத்தில் நான் நடனமாடியெதெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் அவர் நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன். 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கும் நான் அதாவது "பபிதா சிரித்தால் தீபாவளிதான்" என்னும் ரசிகர்கள் நிறைய. இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது.

 எந்த கேரக்டர் கொடுத்தாலும் கலக்கத்தயார்-பபிதா

எந்த கேரக்டர் கொடுத்தாலும் கலக்கத்தயார்-பபிதா

இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலைமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச் சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்துவாங்க தயாராக இருக்கிறேன்.

 ஒன்று செய்தாலும் நின்று செய்யணும்-பபிதா

ஒன்று செய்தாலும் நின்று செய்யணும்-பபிதா

நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தப்பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்" என்று கூறியுள்ளார். கவர்ச்சியில் 90 களில் கலக்கிய பபிதா மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட தயாராகிவிட்டார்.அவருக்கு வாய்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X