ஒரு வேளை தீர்ப்பு சாதகமாக வந்தால்... என்ன செய்ய வேண்டும் கமல்ஹாஸன்?

By Shankar

Viswaroopam
சென்னை: இன்று விஸ்வரூபத்துக்கு சாதகமாக ஒருவேளை தீர்ப்பு வந்தால்.. உடனடியாக கமல் செய்ய வேண்டியது என்ன?

இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த சிலரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

டிடிஎச்சில் உடனடியாக வெளியிட்டு விட வேண்டும்...

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில் மிகவும் அறியப்பட்ட ராமானுஜம் நம்மிடம் கூறுகையில், "இப்போதுள்ள சூழலில் விஸ்வரூபம் படத்துக்கான தடை நீக்கப்பட்டுவிடும் என்றே தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், கமல் சற்றும் தாமதிக்காமல் படத்தை இன்றே டிடிஎச்சில் வெளியிட்டுவிட வேண்டும். காரணம், தியேட்டர்களில்தான் பிரச்சினை செய்ய முடியும். டிடிஎச்சை ஒன்றும் பண்ண முடியாது. அதே நேரம் கமலின் கருத்தும் நாடு முழுவதும் சென்று சேர்ந்துவிடும்.

கமல் என்ற மகா கலைஞன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதாலேயே, நான் எதிர்க்கும் விஷயத்தைக் கூட ஆதரிக்க வேண்டிய சூழல் உள்ளது," என்றார்.

இயக்குநர் கேயார்

இன்று தடை விலகினால் உடனடியாக கமல் சார் படத்தை கிடைக்கிற வழிகளில் எல்லாம் வெளியிட்டுவிட வேண்டும். அது பண ரீதியாக மட்டுமல்ல, அவர் கருத்து அனைவருக்கும் சென்று சேர உதவியாக இருக்கும். மீண்டும் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க தேவையில்லை. இல்லாவிட்டால் வேறு எந்த வழியிலாவது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பெயர் குறிப்பிட வேண்டாம்...

தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கிய இயக்குநரிடம் பேசியபோது, 'என் பெயரைக் குறிப்பிட வேண்டாம். காரணம், நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன் அனுமானத்துடன் எதையும் சொல்லக் கூடாது. கமல் தன் கருத்து அனைத்துத் தரப்புக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புவது நியாயமே. அதே போல, அந்த கருத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தோடு, எதிர்த்தரப்பு போராடுவதில் உள்ள நியாயமும் புரிந்து கொள்ளக் கூடியதே. இன்று தீர்ப்பு சாதகமாகவே வந்தாலும்கூட, கமல் முதல் தனக்கு முன் உள்ள எதிர்ப்பு நெருப்பைத் தணிக்கும் வேலையில் இறங்குவதே சரியாக இருக்கும். அதற்கு அவர் பேச்சுவார்த்தையின் துணையை நாடலாம்!

நீங்க என்ன சொல்றீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X