கேஜிஎஃப் 2 மட்டும் வரலன்னா பீஸ்ட் சூப்பர் ஹிட்டாகி இருக்கும்!
சென்னை: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் பிரவீன் காந்தி கே ஜி எஃப் 2 மட்டும் வெளியாகவில்லை என்றால் பீஸ்ட் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என பேசியுள்ளார்

போதைப்பொருள் கடத்தலை
கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் தமிழ் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறினார். கோலமாவு கோகிலா நயன்தாரா யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியானது. போதைப்பொருள் கடத்தலை மிக வித்தியாசமாக கூறி இருந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்த நெல்சன் டாக்டர் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இந்த முறை பெண்கள் கடத்தலை மையமாக வைத்து எடுத்து நெல்சன் இதிலும் வெற்றி பெற்றார்.

ஆவலுடன் எதிர்பார்த்து
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டும் மாபெரும் வெற்றிபெற்ற சூழலில் அடுத்து யாரை வைத்து இயக்குவார் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய்யை நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர்.

பீஸ்ட் கலவையான விமர்சனங்களை
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டும் மாபெரும் வெற்றிபெற்ற சூழலில் அடுத்து யாரை வைத்து இயக்குவார் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய்யை நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர்.

கே ஜி எஃப் 2 மட்டும் வரலன்னா
ஒரே சமயத்தில் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 என மிகப் பெரிய படங்கள் வெளியானதால் அனைவரும் இரு படங்களையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பேசியதாவது: கே ஜி எஃப் 2 மட்டும் வரவில்லை என்றால் பீஸ்ட் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். பீஸ்ட் வெளியான அதே சமயத்தில் கே ஜி எஃப் 2 வெளியானதால் மக்கள் இரண்டு படங்களையும் கம்பேர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனாலேயே பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. பீஸ்ட் இயக்குனர் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் அரபு குத்து பாடல் பாடலை நெல்சன் பிரமோட் செய்ததை பார்த்து நானே பிரமித்து போய் விட்டேன். என அந்த நேர்காணலில் இயக்குனர் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











