சினிமாவில் போதைப்பொருள்.. ரத்த பரிசோதனை செய்தால் பல ஹீரோக்கள் கைது செய்யப்படுவார்கள்.. கங்கனா பகீர்

By

மும்பை: சினிமாவில் போதைப் பொருள் தாராளமாக புழங்கப்படுகிறது என்றும் பலர் நடிகர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால், கைது செய்யப்படுவார்கள் என்றும் நடிகை கங்கனா பகீர் புகார் கூறியுள்ளார்.

Recommended Video

Sushant Singh மரணத்திற்கு இது தான் காரணம் | Kangana Ranaut with Evidence

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

கங்கனா ரனவத்

கங்கனா ரனவத்

இந்நிலையில் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து சாடி வருகிறார் நடிகை கங்கனா ரனவத். நெபோடிசம் பற்றியும் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது பாலிவுட்டில் நிலவும் போதை பொருள் குறித்து அதிரடியாக பேசி உள்ளார்.

கொக்கைன் தாராளம்

கொக்கைன் தாராளம்

இதுபற்று தனது சில ட்விட்டர் பதிவில் அவர் பரபரப்பான தகவல்களைக் கூறி இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: பாலிவுட்டில் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன். கிட்டத்தட்ட வீடுகளில் நடக்கும் அனைத்து மது விருந்துகளில் இது தாராளம். அது விலையுயர்ந்த போதைப்பொருள். ஆனால், பார்ட்டிகளுக்கு முதன் முதலாக செல்பவர்களுக்கு இலவசமாகவே கொடுப்பார்கள்.

மைனராக இருந்தபோது

மைனராக இருந்தபோது

பிறகு MDMA படிகங்கள் என்ற செயற்கை மருந்து, தண்ணீரில் கலக்கப்பட்டு உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுக்கு செலுத்தப்படும். நான் மைனராக இருந்தபோது, என் வழிகாட்டியாகவும் என்னை துன்புறுத்துபவராகவும் இருந்தவர் குளிர்பானங்களில் போதைப் பொருள் கலந்து கொடுத்து விடுவார். நான் வெற்றி பெற்ற நடிகையானதும் பெரிய படங்களின் பார்ட்டிகளுக்கு சென்றபோது அங்கு போதைப்பொருள் மற்றும் மாஃபியா உலகம் இயங்குவதைக் கண்டேன்.

டாப் ஹீரோக்கள்

டாப் ஹீரோக்கள்

போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பல டாப் ஹீரோக்கள் கம்பிகளுக்கு பின்னால் இருப்பார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும். பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாலிவுட் என்றழைக்கப்படும் சாக்கடையை சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன்.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு உதவ நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதனால், என் தொழிலுக்கு மட்டுமல்லாமல் என் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். நடிகர் சுஷாந்த் சிங் இதுபற்றிய சில மோசமான உண்மைகளை அறிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார். இவ்வாறு நடிகை கங்கனா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X