ஹெலன் சொல்வது உண்மையாக இருந்தால் வனிதாவே பீட்டர் மீது வழக்கு தொடராலாம்.. வக்கீல் போட்ட புது குண்டு!

சென்னை: ஹெலன் சொல்வது உண்மையாக இருந்தால் வனிதாவே பீட்டர் பால் மீது வழக்கு தொடரலாம் ஆனால் அவருக்கு உண்மை எது என்று தெரியும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்தான் தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதியே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் திருமணத்திற்கு மறுநாள்தான் ஹெலன் அளித்த புகார் குறித்து தெரியவந்தது.

பொருட்படுத்தாத வனிதா

பொருட்படுத்தாத வனிதா

இதனால் நடிகை வனிதாவை சமூக வலைதளங்களில் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். வனிதா ஏமாந்துவிட்டார் என்றும் ஒரு குடும்பத்தை கெடுத்துவிட்டார் என்றும் நெட்டிசன்கள் விளாசி தள்ளினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வனிதா கணவருக்கு லிப்லாக் கொடுப்பது, சிக்கன் ஊட்டிவிடுவது என வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

எழுத்துப்பூர்வ அறிக்கை

எழுத்துப்பூர்வ அறிக்கை

இந்நிலையில் வனிதாவின் வழக்கறிஞர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் விவாகரத்து தொடர்பான சட்ட நடைமுறைகளை முடித்தபின் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையை அளித்ததாக பீட்டர் பாலின் முன்னாள் மனைவி கூறுகிறார்.

எதிர்காலத்திற்கான தொடக்கம்

எதிர்காலத்திற்கான தொடக்கம்

இருப்பினும், வனிதாவும் பீட்டர் பாலும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் அன்று நடைபெற்ற சிறிய விழா அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு தொடக்கத்தைப் போன்றது.

என்னப் பிரச்சனை

என்னப் பிரச்சனை

தான் முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கப் போவதாக பீட்டர் பால் தெளிவாகக் கூறியுள்ளார், மேலும் அவர் இதுவரை வனிதாவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கோடி ரூபாய்

ஒரு கோடி ரூபாய்

இந்த விவகாரத்தில் வெளிப்படையாக சொல்ல போனால் பணத்திற்கான டிமாண்ட் உள்ளது. உண்மையை எங்களால் மறுக்க முடியாது. ஹெலன், இதுதொடர்பாக முன்பு பீட்டர் பாலிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டார். இப்போது அது ஒரு கோடி ரூபாயாக வந்துள்ளது. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இவை அனைத்தும் எங்களால் நிரூபிக்கப்படும்.

Recommended Video

Vanitha சாயம் வெளுத்தது • கொந்தளிக்கும் ரசிகர்கள் • Vanitha Peter paul
வனிதா புகார் அளிக்கலாம்

வனிதா புகார் அளிக்கலாம்

மேலும் எலிசபெத் சொல்வது உண்மை என்றால், வனிதா கூட பீட்டர் பால் மேல் புகார் அளிக்க முடியும். அவர் வனிதாவிடமிருந்து உண்மையை மறைத்திருக்கிறார் என்றால், வனிதாவே பீட்டருக்கு எதிராக புகார் அளிக்க முடியும். ஆனால் உண்மை என்ன என்பது வனிதாவுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: vanitha வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X