ஆடை படத்தை பார்த்து தவறான பாதைக்கு சென்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும்.. அமலா பால் கோபம்!

Recommended Video

Aadai Press Meet - நிர்வாணமா எப்படி நடிச்சேன் தெரியுமா?

சென்னை: ஆடை படத்தை பார்த்து ஒருவர் தவறான பாதைக்கு சென்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும் என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பால் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது ஆடை திரைப்படம். இந்தப் படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் அண்மையில் வெளியாகி பல மில்லியன் வியூஸ்களை அள்ளியது. படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்கள்

ஒரு சாரார் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பாலின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

நிர்வாண காட்சியில்

நிர்வாண காட்சியில்

இந்நிலையில் படத்தின் கதாநாயகியான அமலா பால் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஆடை படம் குறித்து பேசிய அமலா பால், படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததை வைத்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை ஏற்கமுடியாது என்றார்.

சைக்கோதான்

சைக்கோதான்

சமூக வலைத்தளத்தில் ஏராளமான ஆபாச படங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். ஆடை படத்தை பார்த்து ஒருவர் தவறான பாதைக்கு செல்கிறார் என்றால் அவர் சைக்கோவாகத்தான் இருக்க முடியும் என்றும் அமலா பால் காட்டமாக கூறினார்.

சாதிக்க துடிக்க பெண்

சாதிக்க துடிக்க பெண்

இந்த படத்தில் நல்ல வி‌ஷயங்கள் உள்ளன. சொந்த காலில் நின்று சாதிக்க துடிக்கும் பெண்ணாக நடித்து இருக்கிறேன் என்றும் அமலா பால் தெரிவித்தார். ஏற்கனவே ஆடை படம் தனிமனித சுதந்திரத்தை பற்றி பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X