அவங்க பங்கேற்றால்.. இவங்களோட கெஸ்ட் என்ட்ரி இருக்குமா? வெறித்தன எதிர்பார்ப்பில் பிக்பாஸ் 4!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Recommended Video

4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த குடும்பம் | ALS PRODUCTION |REWIND RAJA EP-04 | FILMIBEAT TAMIL

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான டீசர் கடந்த வாரம் வெளியானது.

கையில் காஃபி கப்புடன் கெத்தாய் வந்த நடிகர் கமல் ஹாசன் தனக்கே உரிய ஸ்டைலில் வேலையை தொடங்கலாமா என கேட்டு உசுப்பி விட்டு சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் முழு பாதுகாப்பு அம்சங்களுடன் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அரசல்புரசலாக தகவல் பரவிய போதே, இந்த பிரபலங்கள்தான் பங்கேற்க போகிறார்கள் என ஒரு மாதத்திற்கு முன்பே பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் வளைய வரத் தொடங்கி விட்டது.

சூர்யாதேவி

சூர்யாதேவி

அதில் இடம் பெற்ற சில பிரபலங்கள் நாங்கள் பங்கேற்கவில்லை என பிக்பாஸ் குறித்து பரவிய தகவலை மறுத்துவிட்டனர். அந்த பட்டியலில் முக்கியமாக பார்க்கப்படுவது சூர்யாதேவியின் பெயர்தான். யூ டியூப் பிரபலமான சூர்யா தேவிக்கு என சில ரசிகர்கள் உண்டு.

அடுத்தவர் கணவர்

அடுத்தவர் கணவர்

குறிப்பாக வனிதாவின் மூன்றாவது திருமணம் தொடர்பாக பேசி காவல்நிலையம் வரை சென்றவர் சூர்யா தேவி. வனிதா, ஏற்கனவே திருமணமான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்ததற்காக அடுத்தவர் கணவரை அபகரித்து விட்டார் என்று கிழித்து தொங்கவிட்டார்.

காரித்துப்பிய சூர்யாதேவி

காரித்துப்பிய சூர்யாதேவி

இதன் மூலம் அதிக சப்ஸ்க்ரைப்பர்களை கொண்டார். அதோடு அவர் ஷேர் செய்த வீடியோக்கள் பெரும் வைரலாகி அதிக வியூஸ்களை குவித்தது. அடுத்து.. சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுனையும் வச்சு செய்தார். மீரா மிதுன் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்தும் பேசியதற்காக அவரை யூட்யூப்பில் காரித்துப்பினார் சூர்யா தேவி.

சண்டக்கோழி வேண்டும்

சண்டக்கோழி வேண்டும்

இதனால் சர்ச்சைக்குரிய ஒரு பிரபலமாக பார்க்கப்பட்டு வருகிறார் சூர்யா தேவி. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு சண்டக்கோழி பிக்பாஸ் வீட்டிற்கு தேவை. பிக்பாஸ் நிகழ்ச்சியும் சண்டை சச்சரவுகளுடன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்க வேணடும்.

வனிதா கெஸ்ட்?

வனிதா கெஸ்ட்?

ஆகையால் அதற்கு ஆப்ட்டான ஒரு ஆளை நிச்சயம் கொண்டு வருவார்கள். ஒரு வேளை சூர்யா தேவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், பழைய சீசன்களை போல கடந்த சீசன் போட்டியாளரான வனிதா கெஸ்ட்டாக வந்தால் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செருப்பால் அடிக்கப்போனார்

செருப்பால் அடிக்கப்போனார்

ஏற்கனவே தன்னை ஆபாசமாக பேசியதால் சூர்யா தேவி மீது போலீஸில் புகார் அளித்த வனிதா, காவல் நிலையத்திலேயே அவரை செருப்பால் அடிக்கப்போனார் வனிதா. அதேபோல் சூர்யா தேவியும் வனிதாவை விடுவதாய் இல்லை சமூக வலைதளங்களில் தாறுமாறாய் பேசி வருகிறார்.

யார் சிக்கப்போகிறார்கள்?

யார் சிக்கப்போகிறார்கள்?

டிஆர்பி மற்றும் நிகழ்ச்சி ஹிட்டாக வேண்டும் என்றால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உருவாக்குவார்கள் நிகழ்ச்சி தரப்பினர். பிக்பாஸ் நிகழ்ச்சி உறுதியாகிவிட்டதால் இதில் யார் சிக்கப் போகிறார்கள்? என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் நாளுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் வர போகிறார்கள்? என்ன நடக்கப்போகிறது என்று..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X