Leo - அரசு அனுமதி அளித்தாலும் லியோ 7 மணி காட்சிக்கு சாத்தியமில்லை.. திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி முடிவு
சென்னை: Leo Release Issue (லியோ ரிலீஸ் பிரச்னை) அரசு அனுமதி அளித்தாலும் லியோ 7 மணி காட்சிக்கு சாத்தியமில்லை என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சக்கட்டமாக இருக்கிறது. ஏனெனில் இதுவரை லோகேஷ் இயக்கிய அத்தனை படங்களும் ஹிட். எனவே இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டிக்கும் என்று நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

டிக்கெட் புக்கிங்: லியோ படத்துக்கான டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். இதுவரை பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்று காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல் நாளில் லியோ கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு காட்சி: இந்த சூழலில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. ஆனால் சிறப்பு காட்சியை அதிகாலை நான்கு மணிக்கு திரையிடக்கூடாது 9 மணிக்குதான் திரையிடப்பட வேண்டும் என்றும் ஒரு செக் வைத்தது அரசு. இதனை படக்குழு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென நீதிமன்றம் சென்றது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

நோ மீன்ஸ் நோதான்: படத்தயாரிப்பு தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் ஏழு மணி காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
ட்விஸ்ட்: இந்த சூழலில் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு உள்துறை செயலாளரை சந்தித்தனர். அதன் பிறகு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட உரிமையாளர் சங்கத்தினர், "அரசு அனுமதி அளித்தாலும் லியோ 7 மணி காட்சிக்கு சாத்தியமில்லை. ஏற்கனவே காலை 9 மணி காட்சிக்கான முன்பதிவு நடந்துவிட்டது.

இப்போது 7 மணி காட்சி திரையிடப்பட்டால் 9 மணிக்கு முன்பதிவு செய்தவர்களை என்ன செய்வது. பிரச்னை வருமா வராதா. 500 பேர் படம் பார்க்கும் தியேட்டரில் 9 மணி காட்சி என்று பிளான் செய்துவருவார்கள். அப்போது 7 மணிக்கு காட்சியை திரையிடுவது உசிதப்படாது" என்றனர்.


Click it and Unblock the Notifications











