பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்தால்..பதுக்கலும், சுரண்டலும் அதிகரிக்கும்..தனலட்சுமியை சொல்கிறாரா கமல்?
ஸ்வீட் பண்ண சொன்னா ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க. பணம் முக்கியம் என்றால் பதுக்கலும், சுரண்டலும் அதிகமாகும் என்று கமல் தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஸ்வீட் கடை டாஸ்கில் தனலட்சுமி பண விவகாரத்தில் நடந்து கொண்டது நெட்டிசன்கால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் இதைத்தான் சொல்கிறாரா?
தனலட்சுமி பணவிவகாரத்தில் தகிடுதத்தம் செய்து இந்தவார எவிக்ஷன் பிராசசிலிருந்து தப்பியதை டீம் மேட்ஸ் கேட்காவிட்டாலும் நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.

ஆரவாரம் அடிதடியுடன் பிக்பாஸ்
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஸ்வீட் கடை டாஸ்க் மிகுந்த ஆரவாரத்துடனும் பரபரப்புடனும், கோபதாபங்கள், துரோகங்கள், சண்டைகள் என சென்றது. சிலர் சண்டை முடிந்து சமாதானமானார்கள். பின்னர் சண்டையும் போட்டுக் கொண்டார்கள். இப்படியே இந்த டாஸ்க் சென்றது. இதில் கொஞ்சமாவது போட்டியாளர்கள் சமாதானமாவது போல் இருந்தால் பிக்பாஸ் வேற சில டாஸ்க் செய்து கொடுத்து மீண்டும் மோதவிடும் நிலை ஏற்படுத்தினார்.

மோதலோ மோதல் ஸ்வீட் கடை டாஸ்க்
கன்வேயர் பெல்ட்டில் தங்களுக்கு வரும் பொருட்களை எடுப்பதில் இரண்டு குழுவினரும் போட்ட போட்டியில் நடந்த அடிதடி, தகராறு, வார்த்தை பிரயோகம், வாக்குவாதம் பெரிய அளவில் சென்றது. முதல் நாளே மணிகண்டனும் தனலட்சுமியும் கடுமையாக மோதிக்கொண்டனர். வாரம் முழுவதும் விக்கிரமனுடன் அமுதவாணன் மோதிக்கொண்டிருந்தார். இதில் அமுதவாணனின் செயல்பாடு மிகவும் விமர்சிக்கப்பட்டது. எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தனலட்சுமியும் அதே போல் அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டும் முறைத்துக் கொண்டும் இருந்தார். அடுத்தவர் பணத்தை திருடலாம் என்பதும் அனுமதிக்கப்பட்டது.

எதிர் அணி பணத்தை திருடிய தனலட்சுமி
ஆனால் ஹோம் மேட்ஸ்கள் அனைவரும் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர். ஆனால் தனலட்சுமி பணத்தை திருடும் போது நிவாஷினியிடம் பிடிபட்டு பின்னர் பணத்தை திரும்ப கொண்டு போய் பெட்டியில் வைத்தார். இது போன்ற விஷயங்களும் நடந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி விக்ரமன் பிக்பாஸ் டாஸ்க்கில் சொன்னதை சுட்டிக்காட்டி தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுத்து பாராட்டைப் பெற்றார். ஆனால் இன்னொரு டீமின் முதலாளி தனலட்சுமி உரிய ஊதியம் கேட்டதற்காக ஷிவினை தன்னுடைய அணியிலிருந்து எதிர் அணிக்கு மாற்றிவிட்டார். இது போன்ற பல தகிடு தத்தங்களும் ஸ்வீட் கடை டாஸ்க்கில் நடந்தது.

போலிக்கணக்கு சொல்லி எவிக்ஷனிலிருந்து தப்பிய தனலட்சுமி
இதில் இறுதியாக நடந்தது தான் வினோதம். அவரவர் அணியில் கல்லாப்பெட்டியில் மிச்சமுள்ள பணத்தை பிக்பாஸ் முன் வந்து உறுதிமொழி எடுத்து தெரிவிக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தினார். உடனடியாக விக்கிரமன் தன்னிடம் 4000 சொச்சம் பணமிருப்பதை உறுதிமொழி எடுத்து தெரிவிக்கிறேன் என்று உட்கார்ந்து விட்டார். ஆனால் தனலட்சுமி பலமுறை போய், போய் வந்து பணத்தைப் பற்றி உறுதியான தகவலை தெரிவிக்க முடியாமல் தடுமாறினார். பின்னர் 6 ஆயிரத்து சொச்சம் இருக்கிறது, என் சம்பளத்தை எடுக்கவில்லை அதில் நான் 2000 எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார். பின்னர் மீண்டும் போய் கணக்கெல்லாம் போட்டுவிட்டு வந்து இறுதியாக ஐந்தாயிரத்து சொச்சம் கல்லாப்பெட்டியில் இருந்தது என்று தெரிவித்தார். 6000 ரூபாயில் 2000 சம்பளமாக போனால் 4 ஆயிரத்து சில்லறை தானே எப்படி ஐயாயிரத்து சில்லறை என்று யாருமே கேட்கவில்லை. அதிக பணம் வைத்திருந்தால் தனலட்சுமி அந்த வார எவிக்சன் ப்ராசஸிலிருந்து தப்பினார். தலைவர் பதவி போட்டியிலும் இருக்கிறார்.

தனலட்சுமியின் தகிடு தத்தம்..விளாசும் நெட்டிசன்கள்
தனலட்சுமி கல்லாப்பெட்டியில் பணத்தை வைக்கவில்லை தன்னுடைய வேலை ஆட்களிடம் கொடுத்து வைத்திருந்தார் என்கிற உண்மையை மறைத்து, கல்லாப்பெட்டியில் தான் பணம் இருந்தது என்று உறுதிமொழி கொடுத்ததும் சம்பள விவகாரத்தில் பலருக்கும் பணம் கொடுக்காமல் தன் பணத்தை கணக்கில் காண்பிக்கவும் பொய்கணக்கு கூறி பிக்பாஸ் உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்று சொன்னதையும் மீறி தவறான தகவலை கொடுத்து இந்த வார எவிக்ஷனிலிருந்து தப்பினார். இது பற்றி மந்தபுத்தி உள்ள எந்த ஹவுஸ் மேட்ஸும் கேட்கவில்லை. ஆனால் வெளியே நெட்டிசன்கள் போட்டு விளாசி தள்ளி வருகின்றனர். பிக்பாஸ் தனலட்சுமிக்கு ஆதரவாக இது பற்றி கண்டுகொள்ளாமல் எப்படி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். பொய்கணக்கு கூறும் தனலட்சுமி என்று விமர்சித்து வருகின்றனர். கமல் இந்த வாரம் இதை பற்றி கேட்பாரா? தனலட்சுமி காப்பாற்ற பிக் பாஸ் துடிப்பது ஏன்? என்று கேட்டு வருகின்றனர்.

தனலட்சுமியை கமல் கண்டிப்பாரா?
இந்த நிலையில் இன்று நடந்த முதல் ப்ரமோவில் கமல்ஹாசன் வரும்பொழுதே, "ஸ்வீட் கடை நடத்த சொன்னால் ஃபைட் கடை நடத்துகிறார்கள். பணம் சம்பாதிப்பதுதான் குறிக்கோள் என்று வந்தவுடன் பதுக்கலும், சுரண்டலும் தானே வரும். நாட்டைப் போலவே இந்த வீடும் உள்ளது" என்று கூறுகிறார். அப்படியானால் கமல்ஹாசன் தனலட்சுமியின் அத்தனை லீலைகளையும் பார்த்துவிட்டு தான் வந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இன்று எப்படியும் தனலட்சுமிக்கு சரியான பாடம் புகட்டுவார், இந்த விஷயத்தை கடுமையாக கண்டிப்பார் என்றும் சொல்லி வருகின்றனர்.

தனலட்சுமியையை கமல் கண்டித்தால் பிக்பாஸுக்கு சிக்கல்
ஆனால் தனலட்சுமியை கண்டித்தால் அது பிக்பாஸ்க்கு சிக்கலாக அமையும். ஏனென்றால் காலையில் நேரலையில் உறுதிமொழி எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்ன பிக்பாஸ் இரவு ஒன்பதரை மணி தொகுப்பில் உறுதியாக இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு சொல்லுங்கள் என்று பேச்சை மாற்றி பேசினார். இதை இமாத் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி வீடியோ எடுத்து போட்டுள்ளனர். அதுவே பிக் பாஸ் தனலட்சுமி இந்த வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய ஏமாற்றுத்தனத்திற்கு துணை போய் உள்ளார். இதை எப்படி கமல் தட்டி கேட்பார் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஆகவே இன்றைய கமல்ஹாசனுடைய நிகழ்வு கடந்த வாரங்களில் இருந்தது போல் வீரியமாக இருக்குமா? அல்லது வீரியம் குறைந்து இருக்குமா? என்பது இன்று இரவு தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











