விஜய்க்கும் அஜித்துக்கும் நடுவுல இப்படி ஒரு போட்டி இருந்துச்சா? கடைசில யார் ஜெயிச்சாங்கன்னு பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக பயணித்து வருகின்றனர் விஜய்யும் அஜித்தும்.

இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருந்தாலும், அவர்கள் நடித்த படங்கள் ஒரேநாளில் வெளியாகும் போது கடுமையான போட்டி நடக்கும்.

விஜய், அஜித் என இருவருக்குமே அவர்களின் ரசிகர்கள் தான் மிகப் பெரிய பலமாக இருந்து வருகின்றனர்.

ஒன்றாக தொடங்கிய பயணம்

ஒன்றாக தொடங்கிய பயணம்

விஜய், அஜித் இருவருமே கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினர். விஜய்யை வைத்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அதேபோல், அஜித் யாருடைய உதவியும் இல்லாமல், வாய்ப்புகள் தேடி தடம் பதிக்கத் தொடங்கினார். இருவருக்கும் ஆரம்பத்தில் பல தோல்விப் படங்கள் அமைந்தாலும், தங்களது திறமையாலே அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.

ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே

விஜய், அஜித் இருவரும் முன்னணி நடிகர்களாக வருவதற்கு முன்னர், ஒரே படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். ‘ராஜாவின் பார்வையிலே' என்ற தலைப்பில் வெளியான அந்தப் படத்தை ஜானகி செளந்தர் இயக்கியிருந்தார். இருவரும் நண்பர்களாக நடித்திருந்த இந்தப் படம், பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இருவரும் இணைந்து ஒருபடம் கூட நடிக்கவில்லை.

விஜய் - அஜித் இணைவார்களா?

விஜய் - அஜித் இணைவார்களா?

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா' படம் சூப்பர் ஹிட் ஆனது. அதில் அஜித் ஆண்டி ஹீரோவாகவும், அர்ஜுன் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை பார்த்த விஜய், "இந்த கதை தெரிந்திருந்தால், இதில் அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன்" எனக் கூறி ரசிகர்களை சூடேற்றினார். இதனால், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருந்தார்.

விஜய்க்கும் அஜித்துக்கும் போட்டி

விஜய்க்கும் அஜித்துக்கும் போட்டி

இருவரது படங்களிலும் விஜய்யும் அஜித்தும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதாகவும் அல்லது சவால் விடுவதாகவும் பஞ்ச் வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் ஆதி படமும், அஜித்தின் பரமசிவன் படமும் 2006ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது.

Recommended Video

Iswarya Menon | Cameraman ராஜசேகர் என்னை ரொம்ப அழகா காட்டி இருக்கிறார் | *INTERVIEW
 எஸ் ஏசி தான் காரணம்

எஸ் ஏசி தான் காரணம்

இதற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான் காரணம் என சொல்லப்படுகிறது. அவரே அஜித் படத்துக்குப் போட்டியாக ஆதியை ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குநர் ரமணாவிடம் கூறியதாகவும், அதனால், சொன்னதைவிட மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆதி ஷூட்டிங்கை முடித்ததாகவும் சமீபத்தில் பேசியிருந்தார். ஆனாலும், ஆதி, பரமசிவன் இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X