twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நடந்தால் எழுதுவேன்...சுயசரிதை எழுதுவது குறித்து ரஜினி

    |

    சுய சரிதை எழுதுவது குறித்து ரஜினி சில ஆண்டுகளுக்கு முன் பேசியுள்ளார். அதில் தான் சுய சரிதை எழுத தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் சுவைபட பதிலளித்துள்ளார்.

    Recommended Video

    Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil

    வறிய நிலையிலிருந்து வாழ்வில் உயர்ந்த ரஜினி

    நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வறிய நிலையிலிருந்து சொந்த முயற்சியால் முன்னேறி சூப்பர் ஸ்டார் ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. மொழி தெரியாத ஊரில், ஹீரோவுக்கு என சில லட்சணங்களை கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சாதித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து உச்ச நடிகராக இருந்து வருகிறார். இது கடின உழைப்பால் மட்டுமே சாத்தியம்.

    பாவ்னிக்கு குறும்படம் போடும் கமல்...இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கு பாவ்னிக்கு குறும்படம் போடும் கமல்...இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கு

    சட்டென எழுந்த குதிரை

    சட்டென எழுந்த குதிரை

    ரஜினியின் திரைப்பட வாழ்க்கையில் எழுச்சியும் வீழ்ச்சியும் இருந்த காலங்கள் உண்டு ஆனால் வீழ்ச்சியை எப்போதும் தாங்காத ரஜினி அடுத்து சிறப்பான படத்தைக் கொடுத்து டக்கென்று எழுந்து நின்றுவிடுவார், கர்ஜனை என்கிற படம் ரஜினிக்கு தோல்வியை கொடுத்தது. அந்த நேரத்தில் பயணங்கள் முடிவதில்லை, வாழ்வே மாயம் போன்ற படங்கள் கமலுக்கும், மோகனுக்கு பேர் வாங்கிகொடுத்தது. ஆனால் ரஜினி அடுத்து ராணுவ வீரன் படம் கொடுத்து சட்டென்று பழைய இடத்தை பிடித்தார்.

    உச்சம் தொட்ட ரஜினி

    உச்சம் தொட்ட ரஜினி

    அதைத்தொடர்ந்து ரஜினிக்கு ஏறுமுகம்தான் அவர் திரும்பி பார்க்கமுடியாத அளவுக்கு ஓடினார். இடையில் பாபா படம் மிகப்பெரிய தோல்வியை தந்தது. இதோடு ரஜினி அவ்வளவுதான் முடிந்தது என பேசினார்கள். டக்கென்று புதிய ரஜினியாக முழு மேக்கப்புடன் சந்திரமுகி என்கிற கமர்ஷியல் படத்தை கொடுத்து அது 800 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அப்போது பேசிய ரஜினி நான் யானை இல்லை குதிரை சட்டென்று எழுந்துவிடுவேன் என்று பேசினார். இது ரஜினியின் தொழில்பக்தி.

    சிவாஜி, எந்திரன் இமாலய வெற்றி

    சிவாஜி, எந்திரன் இமாலய வெற்றி

    அதற்கடுத்து சிவாஜி, எந்திரன் என வெற்றிப்படங்களை கொடுத்தார் ரஜினி. அந்த வெற்றி விழாவில் ரஜினியிடம் அவரது குருநாதர் பாலசந்தர் சில கேள்விகளை கேட்டார். சிவாஜி ராவ் ரஜினிகாந்தாக மாறினார், ரஜினிகாந்த் சிவாஜிராவாக மாறுவாரா? என்கிற கஷ்டமான சங்கடமான கேள்வியை கேட்டார். அதற்கு சட்டென பதில் சொன்ன ரஜினி சிவாஜிராவ் இன்னும் இருக்கிறார், ரஜினிகாந்தாக மாறினாலும் சிவாஜி ராவ்தான் இன்னும் இருக்கிறார் ஆகவே அதற்கு அவசியமில்லை என்று பதிலளித்தார். எவ்வளவு உயரச் சென்றாலும் பழசை மறக்கவில்லை என்கிற ஆழமான பதில்தான் அது.

    சுயசரிதை எழுதுவது பற்றி ரஜினி

    சுயசரிதை எழுதுவது பற்றி ரஜினி

    நீங்கள் சுய சரிதை எழுதவேண்டும் என்பது என் ஆசை எழுதுவீர்களா என்று பாலச்சந்தர் கேட்க நீண்ட ஆலோசனை செய்த ரஜினி நான் சுயசரிதை எழுதினால் அதில் உண்மையைத்தான் எழுதவேண்டும், எதையும் மறைக்கக்கூடாது. உண்மையை எழுதினால் பலருக்கு சங்கடம் நேரும். உண்மையை எழுதாவிட்டால் அது சுயசரிதையாக இருக்காது. காந்தியின் சுயசரிதையை படித்திருக்கிறேன், அந்த அளவுக்கு தைரியம் வந்தால் எழுதுவேன் என்று ரஜினி தெரிவித்தார்.

    சுய சரிதை எழுதி யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை-ரஜினி

    சுய சரிதை எழுதி யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை-ரஜினி

    தனது சுயசரிதையை எழுதி பல ஆண்டுகளுக்கு பிறகு பலரை வம்பில் மாட்டிவிட்டவர்கள் மத்தியில் சுயசரிதை எழுதுவதன் மூலம் பலரை காயப்படுத்த நேரிடலாம் என்று எண்ணுகிற ரஜினியின் எண்ணம் பாராட்டத்தக்க ஒன்று தான்.

    English summary
    If this happens I will write, Rajini about writing autobiography
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X