twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்-அஜித்தை வைத்து படம்..வெங்கட் பிரபு மீண்டும் அறிவிப்பு..நடைமுறையில் சாத்தியமா?

    |

    சென்னை: மாறிவரும் சினிமாத்துறையில் சாத்தியமில்லாதது சாத்தியமாகி வருகிறது. அதை தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு.

    அஜித்-விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கத்தயார் என மீண்டும் அறிவித்துள்ளார்.

    பான் இந்தியா காலத்தில் பிரபலங்கள் இணைந்து நடிப்பது சாதாரணமாகி வரும் சூழலில் விஜய், அஜித், வெங்கட் பிரபு இணைவது சாத்தியமே என சினிமா ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி... நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி... நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல்

    ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்குநர்கள் போட்டியில் வெங்கட் பிரபு வாழ்த்து

    ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்குநர்கள் போட்டியில் வெங்கட் பிரபு வாழ்த்து

    தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். இதில் 5000 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் 90 பேர் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லடசம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

    சூழல் வெப் சீரிசை பாராட்டிய வெங்கட் பிரபு

    சூழல் வெப் சீரிசை பாராட்டிய வெங்கட் பிரபு

    இந்த விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் வெங்கட்பிரபு பேசினார். அப்போது சினிமா குறித்த அவரது கருத்தை சொன்னார். ஓடிடி, சினிமா குறித்தும், மற்ற படங்களைப்பற்றியும், அதில் நடித்த நடிகர்களைப்பற்றியும் பேசினார். மொழி தெரியாமல் தெகுங்கு, இந்தியில் கால் பதித்த ஏ.ஆர்.முருக தாஸ், பிரபுதேவா குறித்து பாராட்டி பேசினார். சூழல் வெப்சீரீஸ், லோகேஷ் கனகராஜ், சிம்பு பற்றி எல்லாம் பேசினார். ஓடிடி தளம் சினிமாவுக்கு போட்டி கிடையாது என்பதை அப்போது குறிப்பிட்டார்.

    மொழி சினிமாவுக்கு தடையே அல்ல

    மொழி சினிமாவுக்கு தடையே அல்ல

    அவரது பேச்சு வருமாறு, " இங்கிருக்கும் எல்லோரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தெலுங்கு எனக்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். ஹிந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை.

    அடுத்து நாம் எப்போது படம் செய்ய போகிறோம்-சிம்பு என்னிடம் கேட்டார்

    அடுத்து நாம் எப்போது படம் செய்ய போகிறோம்-சிம்பு என்னிடம் கேட்டார்

    மாநாடு படத்தில் சிம்புவிற்கு பில்ட்ப் இருக்காது. ஆனால், அவரை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காட்டியிருப்பார். அப்படத்தை பார்த்து விட்டு சிம்புவை பாராட்டினேன். நாம் எப்போது அடுத்த படம் எடுக்க போகிறோம் என்று கேட்டார். அதற்காக சூழல் வரும்போது நிச்சயம் எடுப்போம் என்று கூறினேன். கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன்.

    82 வயதிலும் படம் எடுக்கும் இயக்குநர்கள் உள்ளனர்

    82 வயதிலும் படம் எடுக்கும் இயக்குநர்கள் உள்ளனர்

    குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குநர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும். எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குநருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள். குறும்படம் எடுப்பவர்கள் அவர்களை நினைத்து அவர்களே பெருமையடைய வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதுபுது விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஓடிடி போட்டியான தளம் அல்ல

    ஓடிடி போட்டியான தளம் அல்ல

    திரையங்கிற்கும், ஓடிடிக்கும் போட்டியே கிடையாது. திரையரங்கம் செயல்படாத கொரானா காலகட்டத்தில் பணத்தை செலவழித்து வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும்போது ஓடிடி-யில் வெளியிட்டோம். ஆகையால், இதுவும் பொழுதுபோக்கே தவிர போட்டி கிடையாது. விக்ரம் படம் விரும்பி பார்த்தேன். ஓடிடி-யில் வெளியான சுழல் தொடர்கதையை விரும்பி பார்த்தேன்.

    எனக்கு பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -வெங்கட் பிரபு

    எனக்கு பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -வெங்கட் பிரபு

    சமீபத்தில் பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவை பிடித்திருந்தது. அதேபோல், திருச்சிற்றம்பலமும் நன்றாக இருந்தது. நித்யாமேனன் சிறப்பாக நடித்திருந்தார். தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து இயக்குவதற்கு தயாராக உள்ளேன். என்றார். அஜித், விஜய் இருவரையும் இணைத்து படம் இயக்குவேன் என வெங்கட்பிரபு பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். இருவருக்குமான கதையும் தயாராக இருப்பதாக சொல்லியிருந்தார். மாநாடு வெற்றிப்பெற்ற நேரத்தில் மீண்டும் இதே கோரிக்கை எழுந்தது.

    மாறி வரும் சினிமா ட்ரெண்ட் விஜய்-அஜித் சேர்ந்து நடித்தால் என்ன?

    மாறி வரும் சினிமா ட்ரெண்ட் விஜய்-அஜித் சேர்ந்து நடித்தால் என்ன?

    இன்றைய சினிமா முற்றிலும் மாற்றத்தை நோக்கி நகர்கிறது. பான் இந்தியா படங்கள் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. பல மொழியில் நடிக்கும் நடிகர்கள் ஒன்றிணைகிறார்கள். கேரக்டர்களுக்காக பிரபலங்கள் ஒன்றிணைந்து நடிப்பது சாதாரண விஷயமாகி வருகிறது. உதாரணம் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களைச் சொல்லலாம். பாலிவுட்டிலும் இந்த மாற்றம் வந்துள்ளது. இதேபோல் இப்படி நடிப்பதால் படத்தின் கலெக்‌ஷன் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதற்கும் மேற்கண்ட படங்கள் உதாரணம்.

    கமல்ஹாசன் பாணியை கையிலெடுப்பார்களா விஜய், அஜித்?

    கமல்ஹாசன் பாணியை கையிலெடுப்பார்களா விஜய், அஜித்?

    ஆகவே விஜய், அஜித் இணைந்து நடித்தால், அதிலும் வெங்கட்பிரபு இயக்கம் என்றால் அது மிகப்பெரிய பட்ஜெட் படமாக வசூலை வாரி குவிக்கும் படமாக இருக்கும். அஜித், விஜய் மார்கெட் இருவரும் இணைவதன் மூலம் மேலும் அடுத்தக்கட்டத்துக்கு நகரவே வாய்ப்பு அதிகம். முன்பு இருந்தது போல் சினிமாவில் இனி சாத்தியமில்லாதது எதுவும் இல்லை, ஆனானப்பட்ட கமல்ஹாசனே அவரது நிலையை மாற்றி விக்ரம் படத்தில் பலரையும் இணைத்து பெருவெற்றி பெற்றுள்ளார், ஆகவே விரைவில் இது சாத்தியமாகும் என்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.

    English summary
    The impossible is becoming possible in the changing film industry. Venkat Prabhu mentioned it in his speech. He has again announced that he will direct the film with both Ajith and Vijay. Cinema researchers say that it is possible for Vijay, Ajith and Venkat Prabhu to join forces in the Pan India era where it is becoming common for celebrities to act together.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X