ஜவான்ல மட்டும் விஜய் இருந்தா.. லியோ கலெக்‌ஷன் வேற லெவல்ல இருக்கும்.. ஆடியோ லாஞ்சுக்கு கன்ஃபார்ம்!

சென்னை: நடிகர் விஜய் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே ஒரு செய்தி புகைந்துக் கொண்டே வருகிறது. ஆனால், இதுவரை படக்குழுவினர் அதனை உறுதி செய்யவில்லை.

ஷாருக்கானின் பதான் படத்தில் சல்மான் கான் சூப்பர் கேமியோ ரோலில் டைகராக வந்து மாஸ் காட்டிய நிலையில், அந்த படம் 1000 கோடி வசூலை தட்டித் தூக்கியது.

If Vijay has done a cameo role in Jawan, it will be a boost for Leo at Hindi belt box office

அதே போல விஜய் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்தால் அந்த படத்துக்கு மட்டுமின்றி விஜய்யின் லியோ படத்துக்கும் அது மிகப்பெரிய பிசினஸை இந்தி பெல்ட்டில் ஏற்படுத்தும் என சினிமா வட்டாரமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

ஜவானில் விஜய் கேமியோ: அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களில் நடித்து மிகப்பெரியளவில் தனது பாக்ஸ் ஆபிஸை உயர்த்திக் கொண்டார் நடிகர் விஜய். இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, அமிர்தா அய்யர், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதனை படக்குழு கடைசி வரை ரகசியமாக வைத்திருப்பதாகவும் சினிமா பிரபலங்களே பலரும் எதிர்பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லியோ வசூலுக்கு கை கொடுக்கும்: ஒருவேளை விஜய் ஜவானில் கேமியோ ரோலில் சில நிமிடங்கள் வந்து சென்றாலும், அது இந்தி மார்க்கெட்டில் விஜய்யின் அடுத்த படமான லியோவுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

லியோவில் ஏற்கனவே சஞ்சய் தத் மூலமாக இந்தி பெல்ட்டை பிடிக்க விஜய் நினைத்தாலும், ஷாருக்கானின் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்றால், இன்னமும் இந்தி ரசிகர்கள் மத்தியில் மாஸாக விஜய் என்ட்ரி கொடுக்க வசதியாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

ஜவான் ஆடியோ லாஞ்சுக்கு விஜய் வருவார்: மேலும், நடிகர் விஜய் ஒருவேளை ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்றாலும் கூட, அட்லீக்காக ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்கு கண்டிப்பாக வருவார் என்றே சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. அதன் காரணமாகவே ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X