twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள்...மீண்டும் பட விழாவில் எச்சரித்த எஸ்ஏசி!

    |

    சென்னை: மீண்டும் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் நடிகர் கதிரவன் நடித்துள்ள படம் மீண்டும். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    90ஸ் கவர்ச்சி நடிகை 'மடிப்பு அம்சா'… இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!90ஸ் கவர்ச்சி நடிகை 'மடிப்பு அம்சா'… இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

    இதில் இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகர், பேரரசு மற்றும் நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் ஐ லியோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?

    சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?

    இந்தி நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மீண்டும் சரவணன் சுப்பையா... திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை.

    யாரும் நினைத்துப்பார்க்க முடியாத..

    யாரும் நினைத்துப்பார்க்க முடியாத..

    சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70, 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம். ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள்.

    ஒரு படம் சறுக்கினாலும்..

    ஒரு படம் சறுக்கினாலும்..

    வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும். படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது.

    சினிமாவை காதலித்தால்..

    சினிமாவை காதலித்தால்..

    ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செதூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார்.

    Recommended Video

    பேசுனாலும் கேஸ் போடுவாங்க | SAC Speech in Naan Kadavul Illai
    வழி தவறி போகிறார்..

    வழி தவறி போகிறார்..

    அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது... என பதிவிட்டுள்ளார்.

    English summary
    If we give one failure people will forget us says SA Chandrasekar in Meendum movie trailer launch. Saravanan Subaiya's Meendum Movie trailer has been launched yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X