'பிக் பாஸ்'ல எங்க சப்போர்ட் உங்களுக்குத்தான்.. பிரபல நடிகைக்கு ஆதரவாக இப்போதே இறங்கிய ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸில் எங்கள் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு என்று பிரபல நடிகைக்கு ஆதரவாக இப்போதே ரசிகர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசன் அடுத்த மாதம் 4 ஆம் தேதி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகாரபூர்வமாக
இதில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு லிஸ்ட் வெளியாகி வருகிறது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்தப் பெயர்கள் அடிக்கடி மாற்றப்பட்டும் செய்திகள் வெளியாகின்றன. வழக்கமான 14 போட்டியாளர்களுக்கு பதிலாக இந்த முறை 12 முதல் 14 போட்டியாளர்கள் வரை பங்கேற்க இருப்பதாவும் கூறப்படுகிறது.

நடிகை கிரண்
100 நாட்களுக்கு பதிலாக 80 நாட்களாக குறைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டியாளர்களில் ஒருவராக நடிகை கிரணும் இருக்கிறார் என்கிறார்கள். இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை என்றாலும் அவர் பெயர் அதிகமாக அடிபடுகிறது. இதுபற்றி அவரும் எதுவும் சொல்லவில்லை.

கேரக்டர் ரோலில்
இவர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி மூலம் ஹீரோயின் ஆனவர். அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

முன்னாள் ஹீரோயின்
இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோவாக போட்டுத் தாக்கும் நடிகைகளில் ஒருவர், கிரண். முன்னாள் ஹீரோயின் ஆகிவிட்ட கிரணுக்கு இப்போதும் கன்னா பின்னா ரசிகர்கள். அவர்களை இப்போதும் அமைதியாக மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார் சோசியல் மீடியாவில்.

கிளாமர் புகைப்படங்கள்
அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் லைக்ஸ்களும் கமென்ட்களும் குவிகிறது. சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அதற்கு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்ஷன்களை அதிகமாக ரசிக்கிறார்.

ரசனையான கமென்ட்
அவர் இப்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. இதற்கு கேப்ஷனாக, வாழ்க்கை அழகானது என்று கூறியுள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் ரசனையான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், கிண்டலாக, இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை என்று கலாய்த்திருக்கிறார்.
Recommended Video

பிக் பாஸ்ல வர்றீங்கள்ல?
சிலர், பிக் பாஸ்ல வர்றீங்கள்ல, தமிழ் ரசிகர்கள் சப்போர்ட் உங்களுக்குத்தான் என்று இப்போதே ஆதரவு தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள், பிக் பாஸ்ல வர்றீங்களா, இல்லையா என்று கேட்டுள்ளனர். இன்னொருவர் யாராவது இவங்களுக்கு ஒரு ரோல் கொடுங்கப்பா? என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











