பெர்ஃபெக்ட் பொண்ணு வேணும்னா வேற ஆளப்பாரு.. என்ன டிடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே!
சென்னை: இன்ஸ்டாகிராமில் புதுசா போட ரீல் ஏதும் கிடைக்கவில்லை என கடலில் குளிக்கும் த்ரோபேக் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார் தொகுப்பாளினி டிடி நீலகண்டன்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி அந்த இன்ஸ்டாகிராம் ரீலுக்கு கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பெர்ஃபெக்ட்டா பொண்ணு வேணும்னா அதுக்கு வேற ஆளப்பாரு என பதிவிட்டுள்ள டிடி ஒரு சூப்பர் ட்விஸ்ட் உடன் கேப்ஷன் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

காபி வித் டிடி
விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட பிரபலங்களை பேட்டி எடுத்து ரசிகர்கள் மத்தியில் இவரே ஒரு பெரிய பிரபலமாகி விட்டார். டிடியின் போல்டான பேச்சு, சிரிப்பு, நடை, உடை, பாவணைகளை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் டிடிக்கு சமூக வலைதளங்களில் குவிந்து விட்டனர்.

ராதையாக
அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வைரலாக்கும் பழக்கம் டிடிக்கும் இருக்கு. இவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் டிரெண்டாகி விடும். சமீபத்தில், ராதையாக மாறி டிடி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

உல்லாச குளியல்
கடந்த சில வாரங்களாக புதிதாக இன்ஸ்டாகிராம் ரீல் மற்றும் புகைப்படம் எதையும் வெளியிடாமல் சமூக வலைதளத்திற்கு குட்டி குட்பை சொல்லியிருந்த டிடி தற்போது ரசிகர்களுக்காக எதையாவது போட வேண்டுமே என கடலில் குளித்து விளையாடும் த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பெர்ஃபெக்ட் பொண்ணு வேணும்னா
அந்த இன்ஸ்டாகிராம் ரீலுக்கு கேப்ஷனாக "If you need a perfect girl, then I'm not for you (ila song lyrics adhu)" என செம ஃபன்னாக குறிப்பிட்டுள்ளார். அடக்கமான பொண்ணு வேணும்னா அடக்கம் பண்ண பொண்ணை கட்டிக்கோ என சொல்வது போல டிடி நீலகண்டன் இப்படி பதிவிட்டு இருப்பதை பார்த்த பலரும் அதனை லைக் செய்து சூப்பர் அக்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











