twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்பு மேல தப்பு செஞ்சுக்கிட்டு இருக்குறவங்கள என்ன செய்றது? பாலாவுக்கு பூஜை இருக்கு..மிரட்டும் கமல்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

    வழக்கமாக சனிக்கிழமைகளில் கமல் பேசும் காட்சிகள் தான் முதல் புரமோவாய் வெளியாகும். ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் கமல் பங்கேற்கும் காட்சிகள் இடம் பெறவில்லை.

    ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா.. சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்! ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா.. சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!

    மாறாக நேற்று நள்ளிரவிலும் பாலாஜி ஆரியிடம் போட்ட சண்டைதான் இன்றைய முதல் புரமோவாக வெளியானது. கமல் படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வந்ததால் கமலின் புரமோ வர தாமதமானதாக கூறப்பட்டது.

    புத்தாண்டு வாழ்த்துகள்

    புத்தாண்டு வாழ்த்துகள்

    இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் கோட் சூட்டில் வந்துள்ள கமல், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி பேசத் தொடங்குகிறார்.

    அது அப் நார்மல்

    அது அப் நார்மல்

    அவர் பேசுவதாவது, சட்டப்படி நடக்குறது.. நியாயமா நடக்குறது.. நேர்மையா இருக்குறது.. இதெல்லாம் சுவாசியமற்றது அப்படின்னு நினைக்கிறதெல்லாம் நியூ நார்மல். என்னை பொறுத்தவரை அது அப்நார்மல்.

    அது முரட்டுத்தனம்.

    அது முரட்டுத்தனம்.

    மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறதுக்கு பேரு ஸ்ட்ரைட் ஃபார்வர்டு இல்ல. குரலை உயர்த்தி பேசிட்டா அது நியாயமாயிடாது. அது முரட்டுத்தனம். தப்பு மேல தப்பு பண்றவங்களை என்ன பண்றது? தட்டிக் கேட்போம் என்று கூறுகிறார் கமல்.

    தடவிதான் கொடுப்பீங்க

    தடவிதான் கொடுப்பீங்க

    இதனை பார்த்த ரசிகர்கள், அப்போ இன்னைக்கு பாலாஜிக்கு பூஜை இருக்கா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், புரமோல தான் தட்டிக் கேட்பிங்க, புரோகிராம்ல தடவி கொடுப்பீங்க எனறு கூறி வருகின்றனர்.

    English summary
    Biggboss Second promo has been released. Kamal says If you raise your voice, it will not be fair, That is rudeness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X