மற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது.. நம்பர் நடிகை அதிரடி!

மற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா- வீடியோ

சென்னை: மற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் ஹாட் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு இளசுகளின் பிபியை எகிற வைத்து வருகின்றனர்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் கலாய்க்காமல் நகர்வதே இல்லை தொகுப்பாளர்கள். ரசிகர்களும் இருவரின் காதல் குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் கருத்தும் சொல்லாமல் ஊர் ஊராக சென்று காதலை வளர்த்து வருகிறார்கள் இருவரும். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்கின்றனர்.

கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

பல கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா வாங்கி அதில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் றெக்கை கட்டி பறக்கிறது.

கைவசம் ஏராளம்

கைவசம் ஏராளம்

நயன்தாரா இப்போது இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

விளம்பர நிகழ்ச்சிகள்

விளம்பர நிகழ்ச்சிகள்

கோலமாவு கோகிலா படத்தில் போதை பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்று வருகிறார்.

நயன்தாரா விளக்கம்

நயன்தாரா விளக்கம்

படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நயன்தாரா, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார்.

வாழ முடியாது

வாழ முடியாது

அவர் கூறும்போது, "இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது" இவ்வாறு நயன்தாரா கூறினார்.

அனுபவ பேச்சு

அனுபவ பேச்சு

இதுவரை டூயட் பாடி நடித்த நயன்தாரா அறம் படத்தின் மூலம் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் அவருடைய பேச்சிலும் அனுபவம் வெளிப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X