twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதை பழக்கத்தை ஒழிக்கணும்னா போராளியா மாறுங்க..பழிவாங்க நினைக்காதீங்க.. கங்கனாவுக்கு ரம்யா அட்வைஸ்!

    By
    |

    சென்னை: போதை பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய நினைத்தால் அதற்கு எதிரான போராளியாக மாறுங்கள் என்று நடிகை கங்கனாவுக்கு நடிகை ரம்யா கூறியுள்ளார்.

    சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது. நடிகை கங்கனா, பாலிவுட் மாஃபியாக்கள் என்று சில இயக்குனர்களை குற்றஞ்சாட்டினார்.

    பின்னர் நெபோடிசம் பற்றிய பேச்சு சர்ச்சையானது. வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக அவர் பேசினார்.

    போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்புபோதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்பு

    விவாதமாக மாறியது

    விவாதமாக மாறியது

    சமூக வலைதளங்களில் இது கடும் விவாதமாக மாறியது. சில ரசிகர்கள் நேரடியாக வாரிசு நடிகைகளின் டிவிட்டர் பக்கங்களுக்கே சென்று சரமாரியாக கருத்து தெரிவித்ததால் பரபரப்பானது. பின்னர் பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

    திவ்யா ஸ்பந்தனா

    திவ்யா ஸ்பந்தனா

    யார் யார் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்கிற விவரத்தை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் அவருக்கு சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நடிகர் சஞ்ஜய் தத்

    நடிகர் சஞ்ஜய் தத்

    'போதை பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய நினைத்தால் அதற்கு எதிரான போராளியாக மாறுங்கள். ஒரு வீடியோவில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகச் கூறியிருந்தீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, அதிலிருந்து மீண்டது பற்றி, போதை மருந்து ஏன் மோசமானது என்பது பற்றி சொல்லுங்கள். நடிகர் சஞ்ஜய் தத் அதைச் செய்துள்ளார்.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    சக நடிகையான தீபிகா படுகோன் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மறுவாழ்வு மையம்

    மறுவாழ்வு மையம்

    துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பேசும் விதம், உங்கள் நோக்கம் தவறு என தெரிகிறது. போதை பொருள் பயன்படுத்துபவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவேன் என்று அச்சுறுத்துவதற்கு பதிலாக அனுதாபம் காட்டுங்கள். ஆலோசனை சொல்லுங்கள். விருப்பம் இருந்தால் ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பியுங்கள். போதை பழக்கம் இருப்பவர்களுக்கு வாழ்வின் அழகும், இன்பமும் தெரிவதில்லை. நீங்கள் ஆன்மிகவாதி. உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    பழிவாங்க அல்ல

    பழிவாங்க அல்ல

    அவர்களை வெளிப்படுத்துவதுதான் சரியானது என்று நினைத்தால், காவல்துறையிடம் ஆதாரத்தைக் கொடுங்கள். அவர்களுக்கு அது உதவும். நீங்கள் எதைச் செய்தாலும் பழிவாங்குவதற்காக அல்ல, நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள். கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். இவ்வாறு திவ்யா ஸ்பந்தனா

    English summary
    Ramya says to Kangana, 'If you really want to do something about the drug abuse then become the anti-drugs crusader'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X