தாய் மாமன் சீர் பரிதாபங்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை படைத்த தமிழ்ப் படம் ‘ஆக்காட்டி’!

கோவா: 56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில், WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை" ஆக்காட்டி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று விருதை ஏற்றனர்.

தென் தமிழகத்தின் கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர்வரிசை முறையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சமூக மரபுகள் உருவாக்கும் அழுத்தங்களையும், அதனால் மனித மனங்களில் எழும் சிக்கல்களையும், மென்மையான உணர்வுகளையும் ஆக்காட்டி திரைப்படம் நுட்பமாகப் பதிவு செய்கிறது.

IFFI 2025 Aakkaatti Bags the Best Film Recognition Award at Goa

ஆக்காட்டி திரைப்படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமிக்கு இது முதல் படமாகும். இவர் முன்னதாக நாளைய இயக்குனர் - சீசன் 6 போட்டியில் பங்கேற்று, 'அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான' இறுதிப்போட்டி விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த ஆண்டனி, மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் முல்லையரசி, சிறுவன் சுபாஷ் ஆகியோர் கதையின் முக்கிய மாந்தர்களாக நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் எஸ்.இ. எசக்கி ராஜா ஒளிப்பதிவாளராகவும், ராம் குமார் எடிட்டராகவும், தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளராகவும் பணியாற்றினர்.

IFFI 2025 Aakkaatti Bags the Best Film Recognition Award at Goa

மற்றும் ஆர்ட் டைரக்டராக மனோஜ் குமார், நேரடி ஒலி வடிவமைப்பாளராக பாலா ஜீவ ரத்தினம், காஸ்டிங் இயக்குநராக சுகுமார் சண்முகம், CG கலை இயக்குநராக சேகர் முருகன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். டைட்டீல் ஸ்டோரிபோர்டை சந்திரன் வடிவமைக்க, டிரெய்லர் மற்றும் புரமோஷன் எடிட்டிங்கை பிரேம் பி மேற்கொண்டுள்ளார். ரத்தன் கலரிஸ்டாகப் பணியாற்ற, பெப்பிள்ஸ் ஸ்டுடியோவின் ஹரி பிரசாத் M.A. படத்தின் ஒலி வடிவமைப்பை கையாண்டுள்ளார்.

IFFI 2025 Aakkaatti Bags the Best Film Recognition Award at Goa

இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கவிஞர் கார்த்திக் நேத்தா இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். ஆக்காட்டி திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் நற்செய்தியுடன் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக இந்த படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X