நவம்பர் மாதம் நடப்பதாக இருந்த.. இந்திய சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி 16-க்கு மாற்றம்!

By

டெல்லி: கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்படுவது வழக்கம். இதில் இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.

திரைப்பட விழா

திரைப்பட விழா

பல்வேறு நாட்டு திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுவது வழக்கம். ஏராளமான சினிமா ரசிகர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதைக் காணச் செல்வது உண்டு.
இந்த வருடத்துக்கான திரைப்பட விழா, நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவான இது, கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமடைந்து வருவதால், இந்த பட விழாவை, நவம்பர் மாதத்துக்கு பதிலாக, அடுத்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

கோவா மாநில முதல்வர் டாக்டர் பிரமோத் சவாந்த்துடன், இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பின் இந்த தேதி மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள்படி, இந்த திரைப்பட விழா நடைபெறும். இந்த விழா மெய்நிகர் மற்றும் நேரடியான நிகழ்ச்சியாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X