twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செக்ஸி துர்கா' படத்தை கோவா திரைப்பட விழாவில் வெளியிட உத்தரவு - ஐகோர்ட் அதிரடி!

    By Vignesh Selvaraj
    |

    கோவா : கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளானது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் IFFI திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்ட்ன.

    திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார்.

    இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டது. இந்தப் படத்தை கோவா திரைப்பட விழாவில் அனுமதிக்காததால் வழக்கு தொடர்ந்தார் இயக்குநர் சணல் குமார் சசிதரன்.

    பெயர் மாற்றினாலும் செக்ஸி துர்கா தான்

    பெயர் மாற்றினாலும் செக்ஸி துர்கா தான்

    'எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் மாற்றினாலும் அது செக்ஸி துர்காவாகத்தான் தொடரும்' என இந்தப் படத்தின் இயக்குநர் சணல் குமார் சசிதரன் கோபமாகப் பேசியுள்ளார்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஒரு விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாராம் சணல் குமார் சசிதரன். அதனால் படம் ஆரம்பித்ததில் இருந்தே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார்.

    கோவா திரைப்பட விழா

    இந்தநிலையில் கோவாவில் நடைபெற்றுவரும் IFFI சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்தியன் பனோராமாவல் இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப்பட்டியல் செய்தி ஒளிபரப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மூவர் ராஜினாமா

    மூவர் ராஜினாமா

    ஆனால் இறுதி செய்யப்பட்டுத் திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூரி சேர்மன் சுஜாய் கோஷ் மற்றும் இன்னும் இரண்டு ஜூரி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளார்கள்.

    ஐகோர்ட் அதிரடி

    ஐகோர்ட் அதிரடி

    இதனையடுத்து 'செக்ஸி துர்கா' படம் திரையிடலில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டத்தை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் சணல்குமார் சசிதரன். இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா' படத்தை திரையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

    English summary
    The film 'Sexy Durga' has been blocked in the Goa film festival. Sanal Kumar Sasitharan appealed to the Kerala High Court to oppose denial of the film 'Sexy Durga'. The court ordered to screen 'Sexy Durga' at the Goa International Film Festival of India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X