IIFA 2024: சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்ட ஷாருக்கான்.. வீடியோவ பாக்கனுமே

அபுதாபி: திரைத்துறையினர் ஒரு இடத்தில் கூடிவிட்டால் ரசிகர்களுக்கு விருந்துதான். அதுவும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஒரே இடத்தில் கூடிவிட்டால், ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் விருந்து குறித்து கூறவா வேண்டும். இந்த வார்த்தைகளை உண்மையாக்கும் விதமாக நேற்று அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி ஒரு தரமான சம்பவம் அபுதாபியில் நடைபெற்றுள்ளது. அதாவது ஐக்கிய அமீரக எமிரேட்ஸைச் சேர்ந்த அபுதாபியை அடுத்துள்ள யாஸ் தீவில் நடைபெற்ற, IIFA 2024 விருதுகள் நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட விருதுகளை நடிகரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். அப்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள பாடலான, 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடி அசத்தினார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

IIFA உற்சவம் 2024 விருதுகள் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இதே யாஸ் தீவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு மட்டும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பாலிவுட் படங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இன்று முழுக்க முழுக்க இசைக்கான விருதுகள் வழங்கப்படும் என ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது.

shah rukh khan samantha ruth prabhu

நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழில் பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த பாடகர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த துணை நடிகர் என பல பிரிவுகளின் கீழ் பொன்னியின் செல்வன் விருதுகளைக் குவித்தது. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்ததை ரசிகர்கள் தரமாக கொண்டாடி வருகின்றனர்.

ஷாருக்கான்: இப்படியான நிலையில் நேற்று பாலிவுட் படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் ஷாருக்கானுக்கு ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்த விருதினை இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் ஆகியோர் வழங்கினர். ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், ஷாருக்கான்இந்த நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட விருதுகளை தொகுத்து வழங்கினார். இயல்பாகவே ஷாருக்கான் ஒரு குறும்புக்காரர் எனத் தெரியும். சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் நயன்தாராவைக் கடத்துவேன் எனக் கூறினார். அப்படி இருக்கும்போது, இந்த விழா மேடையில் மட்டும் சும்மா இருப்பாரா?

shah rukh khan samantha ruth prabhu

புஷ்பா: IIFA 2024 விருதுகள் மேடையில் நடனமாடிய ஷாருக்கான், ஜவான் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு நடனமாடினார். அதேபோல் தெலுங்கில் இயக்குநர் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடினார். இந்தப் பாடலை நடிகர் விக்கி குஷாலுடன் இணைந்து ஷாருக்கான் ஆடினார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக திரைப்படத்தில் இடம் பெறும் பாடலில் அல்லு அர்ஜுன் இடுப்பில் சமந்தா அமர்ந்து கொண்டு பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை ஆடுவார். அதேபோல் ஷாருக்கான் விக்கியின் மடியில் அமர்ந்து கொண்டு ஆடினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இந்த வீடியோவை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

shah rukh khan samantha ruth prabhu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X