தலைவர் நிரந்தரம்! போட்டிக்கு வந்த படங்களை ஓடவிட்ட ஜெயிலர்.. சிறந்த படத்துக்கான விருதை வென்று அசத்தல்
அபுதாபி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் இவர்தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறும் அளவிற்கு இன்றைக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டின் டாப் இடத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே, மற்ற நடிகர்கள் எதிர்த்து படங்களை ரிலீஸ் செய்ய பயப்பட்டு வருகின்றார்கள் எனக் கூறும் அளவிற்கு கலெக்ஷனில் ரெக்கார்டு படைத்து வருகின்றார். இவரது நடிப்பில் அடுத்த வாரம் அதாவது அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் IIFA உற்சவம் 2024 விருதுகள் விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஜெய்லர் படம் கடந்த 2023ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன் லால், சிவ்ராஜ் குமார் , தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியானது. படம் வசூலில் செம ஹிட் ஆனது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இவரது இசை படத்தை பிரமாண்ட வெற்றிக்கு கொண்டு சென்றது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசியதும் அவர் கூறிய குட்டிக் கதையும் நடிகர் விஜய்யைக் குறிப்பிட்டுக் கூறியதாக பேச்சுகள் எழுந்தது. அதேபோல், நடிகர் விஜய் தனது படமான லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது சூப்பர் ஸ்டாரின் பேச்சுக்கு பதில் அளிப்பதைப் போல இருந்ததாக இணையத்தில் பேச்சுகள் இருந்தது. விஜய்யின் நடவடிக்கையும் அப்படியே இருந்ததால், இருவருக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்தது எனக் கூறப்பட்டது. இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி, ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தென்னிந்திய சினிமா உலகில் நேற்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் எனக் கூறலாம். காரணம், IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 9வது விருது வழங்கும் ஆண்டு ஆகும். இந்த பிரமாண்டமான விழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

நட்சத்திரங்கள்: பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், பிரபுதேவா, சதீஷ், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து, பாலிவுட்டில் திரையுலகில் இருந்து, ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர், அனன்யா பாண்டே மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜெயிலர்: இதில் சிறந்த படத்திற்கான விருதினை ஜெயிலர் படம் வென்றுள்ளது. அதேபோல், தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மேடை பொன்னியின் செல்வனுக்கான மேடையாகவே மாறிப்போனது எனக் கூறலாம்.



Click it and Unblock the Notifications











