IIFA Utsavam 2024 Winners List : விருதுகளை கொத்தாக அள்ளிய பொன்னியின் செல்வன் 2.. மொத்த விபரம் இதோ!
அபுதாபி: தென்னிந்திய சினிமா உலகில் நேற்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் எனக் கூறலாம். காரணம், IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 9வது விருது வழங்கும் ஆண்டு ஆகும். இந்த பிரமாண்டமான விழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் யாருக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், பிரபுதேவா, சதீஷ், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து, ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர், அனன்யா பாண்டே மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மேடை பொன்னியின் செல்வனுக்கான மேடையாகவே மாறிப்போனது எனக் கூறலாம்.

விருது பெற்றவர்கள் லிஸ்ட்:
சிறந்த நடிகை (தமிழ்): ஐஸ்வர்யா ராய் - பொன்னியின் செல்வன் 2
சிறந்த நடிகர் (தமிழ்): விக்ரம் - பொன்னியின் செல்வன் 2
சிறந்த படம் (தமிழ்): ஜெயிலர்

சிறந்த நடிகர் (தெலுங்கு): நானி - தசரா
சிறந்த இயக்குநர் (தமிழ்): மணிரத்னம் - பொன்னியின் செல்வன் 2
சிறந்த இசை அமைப்பாளர் (தமிழ்): ஏ.ஆர்.ரஹ்மான் - பொன்னியின் செல்வன் 2
வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு (தமிழ்): எஸ்.ஜே. சூர்யா - மார்க் ஆண்டனி
இந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனை: சிரஞ்சீவி

இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு: பிரியதர்ஷன்
இந்திய சினிமாவின் ஆண்டின் சிறந்த பெண் (வுமன் ஆஃப் த இயர்): சமந்தா ரூத் பிரபு
வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு (தெலுங்கு): ஷைன் டாம் சாக்கோ - தசரா

வில்லன் பாத்திரத்தில் சிறந்த நடிப்பு (மலையாளம்): அர்ஜுன் ராதாகிருஷ்ணன் - கண்ணூர் ஸ்குவாட்
துணை கதாபாத்திரம் தமிழ் (ஆண்) : ஜெய்ராம் - பொன்னியின் செல்வன் 2
துணை கதாபாத்திரம் தமிழ் (பெண்): சஹராஸ்ரீ - சித்தா
விருது வென்றவர்கள் அனைவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











