ஆஸ்காரையே ஒரு கை பார்த்த இசைப்புயல்.. IIFA உற்சவத்தில் இரட்டை விருதுகளை அள்ளி அசத்தல்!

அபுதாபி: தென்னிந்திய சினிமா உலகில் நேற்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் எனக் கூறலாம். காரணம், IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரமாண்டமான விழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்ததற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

iifa utsavam 2024 a r rahman ponniyin selvan 2 2

இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மேடை பொன்னியின் செல்வனுக்கான மேடையாகவே மாறிப்போனது எனக் கூறலாம்.

iifa utsavam 2024 a r rahman ponniyin selvan 2 2

இரண்டு விருதுகள்: இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் படத்தில் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு பிரிவுகளின் கீழ் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், அனைவருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறினார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் இயக்குநர் மணிரத்னத்திற்கும் நன்றி கூறினார். தனது இசைக் கலைஞர்களுக்கும் நன்றி கூறினார். இரண்டு விருதுகள் வென்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

iifa utsavam 2024 a r rahman ponniyin selvan 2 2

ஐஸ்வர்யா ராய்: இந்த விருது விழாவில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெய்ராம் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகர்கள் ஆண் மற்றும் பெண் பிரிவுகளின் கீழ் வங்கப்பட்டது. ஜெய்ராம்க்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணி ரத்னத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.

iifa utsavam 2024 a r rahman ponniyin selvan 2 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X