மணிரத்னம் காலில் விழுந்த உலக அழகி.. விருது வழங்கும் மேடையில் நடந்த ருசீகர சம்பவம்!

துபாய்: தென்னிந்திய சினிமா உலகில் நேற்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் எனக் கூறலாம். காரணம், IIFA உற்சவம் 2024 விருதுகளை வென்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரமாண்டமான விழா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னத்தின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

iifa utsavam 2024 aishwarya rai mani ratnam

இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த மேடை பொன்னியின் செல்வனுக்கான மேடையாகவே மாறிப்போனது.

iifa utsavam 2024 aishwarya rai mani ratnam

பொன்னியின் செல்வன் 2: இந்நிலையில் இந்த விழாவில் இசையமைபாளார் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பின்னணி இசைக்கு என மொத்தம் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களுக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். நடிகர் விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. விக்ரம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

iifa utsavam 2024 aishwarya rai mani ratnam

காலில் விழுந்த ஐஸ்: இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெரும்போது நடிகை ஐஸ்வர்யா ராய், படத்தின் இயக்குநர் மணி ரத்னத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலரும் ஐஸ்வர்யா ராயின் செயலைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

iifa utsavam 2024 aishwarya rai mani ratnam

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X