நகை திருவிழா: ஷ்ருங்கார தியா, சாவகாசமாக வந்த கல்கி.. கலக்கல் பரேட்!
மும்பை: மும்பையில் நடந்து வரும் இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகைத் திருவிழாவின் முதல் நாளில் நடிகைகள் தியா மிர்சா, சித்ரங்கடா சிங், கல்கி கொச்லின், லிசா ரே, நேஹா தூபியா ஆகியோர் ராம்ப் வாக் செய்தனர்.
இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகைத் திருவிழா மும்பையில் நடந்து வருகிறது. இந்த விழாவில் பல்வேறு டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த நகைகளை மாடல்கள் மற்றும் நடிகைகளுக்கு அணிவித்து ராம்ப் வாக் செய்ய வைப்பார்கள்.
நகை திருவிழாவின் முதல் நாளில் நகைகளை அணிந்து சூப்பராக ராம்ப் வாக் செய்த நடிகைகளை பற்றி பார்ப்போம்.

தியா மிர்சா
இந்தி நடிகையும், மாடலுமான தியா மிர்சா ஆரஞ்சு, தங்க நிற லெஹங்கா அணிந்து நகை வடிவமைப்பாளர் சோபா ஷ்ரிங்காரின் நகைகளை அணிந்து ராணி போன்று கம்பீரமாக ராம்ப் வாக் செய்தார்.

நேஹா தூபியா
முன்னணி மாடலும், நடிகையுமான நேஹா தூபியா கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நகைகளை அணிந்து பிங்க் நிற லெஹங்காவில் அசத்தலாக ராம்ப் வாக் செய்தார்.

சித்ரங்கடா சிங்
நடிகை சித்ரங்கடா சிங் மவ்னி அகர்வால் என்ற நகை வடிவமைப்பாளரின் நகைகளை அணிந்து மணப்பெண் போல் சிவப்பு மற்றும் வெள்ளி நிற லெஹங்காவில் அம்சமாக ராம்பில் நடந்து வந்தார்.

கவ்ஹர் கான்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான கவ்ஹர் கான் ஹர்ஷினி ஜெதானி வடிவமைத்த நகைகளை அணிந்து வெள்ளை நிற கவுனில் அழகாக ராம்ப் வாக் செய்தார்.

கல்கி கொச்லின்
நடிகை கல்கி கொச்லின் ப்ரீத்தி வடிவமைத்த நகைகளை அணிந்து ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ராம்ப் வாக் செய்தார். பார்க்க அழகாக இருந்தபோதிலும் அவர் கைகளை சேர்த்து வைத்து நடந்த விதம் நன்றாக இல்லை. மேலும் கூனல் போட்டு வேறு வந்தது ராம்ப் வாக்கில் பார்க்க சகிக்கவில்லை.

லிசா ரே
நடிகை லிசா ரே டிசைனர் ஃபரா கான் வடிவமைத்த நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்தார். ஃபரா நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனின் சகோதரி ஆவார்.


Click it and Unblock the Notifications











