twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குரு சோமசுந்தரம் நடிப்பில் கால்பந்தாட்ட வீரனின் கதையை சொல்லும் க்

    |

    சென்னை: உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கையை க் IKK படத்தில் மிகவும் தத்ரூபமாகவும், உணர்வு பூர்வமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.

    தனது முதல் கால்பந்தாட்ட போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்வில், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை க் (IKK) திரைப்படம் விளக்குகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    IKK film is the life of a football player

    வரவர தமிழ் சினிமாவில் படத்தின் தலைப்புக்கு பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது. ஆரம்ப காலங்களில் அழகிய தமிழில் படத்தலைப்புகளை வைத்தனர். பின்பு ஏடாகூடமான தலைப்பையும், ஆங்கிலத்திலும் தலைப்புகளை வைக்கத் தொடங்கினர்.

    இப்படியே போனால், தமிழ் அழிந்து விடும் என்று நினைத்து தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு கிடைக்கும் என்று அறிவித்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக தமிழிலேயே பெயர்களை வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது தயாராகும் திரைப்படத்திற்கு க் (IKK) என்று பெயர் வைத்துள்ளனர்.

    IKK film is the life of a football player

    தர்மராஜ் ஃபிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ், எழுதி இயக்கும் திரைப்படம் க். அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    IKK film is the life of a football player

    உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வு பூர்வமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.

    தனது முதல் கால்பந்தாட்ட போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்வில், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

    அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

    IKK film is the life of a football player

    விரைவில் க் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை இயக்கம் கல்லை தேவா வசமும், சண்டைப்பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும் மக்கள் தொடர்பு நிகில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    English summary
    In the life of a footballer who is badly injured in his first soccer match, he tries to investigate the series of events, some of the microscopic information available, and why this happened to him. At the end of the film, the film crews say that the film 'IKK’ explains whether or not he revamped his life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X