Ilaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா
Recommended Video

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் கமல் ஹாஸனை இளையராஜா கலாய்த்தார்.
இளையராஜா 75 நிகழ்ச்சியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான நேற்று கமல் ஹாஸன், ரஜினிகாந்த், விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பாடியது தான் ஹைலைட்.
கமல்
இளையராஜா 75 நிகழ்ச்சி மேடையில் கமல் குணா படத்தில் வந்த கண்மணி அன்போடு காதலன் பாடலை பாட அரங்கமே அதிர்ந்தது. அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி கரகோஷம் இட்டனர்.
தென்றல் வந்து
தென்றல் வந்து தீண்டும்போது பாடலை இளையராஜா பாட அரங்கில் இருந்தவர்களின் காதில் எல்லாம் தேன் வந்து பாய்ந்தது போன்று இருந்தது.
மரியாதை
இளையராஜாவிடம் இருந்து இசையை கற்றுக் கொண்டதாக தெரிவித்த கமல் அவரின் காலை தொட்டு வணங்கினார். பின்னர் இளையராஜாவுக்கு முத்தம் கொடுத்தார். அதை பார்த்த இளையராஜாவோ படத்தில் ஹீரோயினுக்கு கொடுப்பதை எல்லாம் எனக்கு கொடுக்கிறார் என்று கலாய்க்க அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.
நண்பர்
ரஜினிகாந்தையும், கமல் ஹாஸனையும் ஒரே இடத்தில் பார்த்ததில் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











