Ilaiyaraaja75: ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாட, அடடா, அடடா, அடடடடா

By Siva

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கீ போர்டு வாசிக்க இசைஞானி பாட ரசிகர்கள் அசந்துவிட்டனர்.

இளையராஜா 75 நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு தங்க வயலின் பரிசளிக்கப்பட்டது.

இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது.

ரஹ்மான்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி ரஹ்மான் கீபோர்டு வாசிக்க இளையராஜா பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஹ்மான் கீ போர்டு வாசிக்க இளையராஜா மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை பாடினார்.

புன்னகை மன்னன்

இளையராஜா மேடையில் நிற்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புன்னகை மன்னன் பட தீம் மியூசிக்கை தனது கீ போர்டில் வாசிக்க ரசிகர்கள் அசந்தே போய்விட்டனர்.

அரங்கம்

அரங்கம்

இளையராஜாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் வேலை செய்தால் அது 500 படங்களில் வேலை பார்த்ததற்கு சமம் என்று ஏ.ஆர். ரஹ்மான் தெரிவிக்க அரங்கமே அதிர்ந்தது. நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டே ரஹ்மானும், ராஜாவும் தான்.

ஹெட்மாஸ்டர்

ஹெட்மாஸ்டர்

நான் முதன்முதலாக மூன்றாம் பிறை படத்தில் தான் ராஜா சாருடன் சேர்ந்து வேலை பார்த்தேன். ஸ்டுடியோவில் அவரை பார்த்தபோது ஹெட்மாஸ்டரை பார்த்தது போன்று இருந்தது என்று ரஹ்மான் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X