இளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்?
இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக புதிய புரோமோக்களை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு வருகிறது.
சென்னை: இளையராஜா 75 இசை நிகழ்ச்சியையொட்டி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இளையராஜா இசையில் மனதை மயக்கும் பாடல்கள் மற்றும் படக்காட்சிகளைக் கொண்டு ரசிக்க வைக்கும் அழகிய புரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இசைஞானி இளைராஜாவுக்கு 75 வயது நிறைவடைவதை அடுத்து அவருடைய இசையின் பெருமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'திரைக்கொண்டாட்டம் இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரையுலகம் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழ் சினிமாவிற்கே விடுமுறை என அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் இளையராஜாவின் பாடல்களை பல்வேறு இசைக்கலைஞர்கள் பாடவுள்ளனர். இரண்டாம் நாள் இளையராஜா தான் இசையமைத்து பாடிய பல பாடல்களை பாடவுள்ளார்.
இதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இளையராஜா இசையில் வெளியான வெற்றிப் படங்களின் பாடல்கள் மற்றும் பிரபலக் காட்சிகளைக் கொண்டு சின்னச் சின்ன புரோமோக்களை வெளியிட்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம். இளையராஜா ரசிகர்களிடையே இந்த புரோமோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











