ஏ. ஆர். ரஹ்மானுக்கு கெட்டப்பழக்கம் இல்லைனு யார் சொன்னது?

By Siva

Recommended Video

Ilayaraja 75: இளையராஜா-ஏ.ஆர். ரஹ்மான் மேடை தருணங்கள்- வீடியோ

சென்னை: தனக்கும், இளையராஜாவுக்கும் ஒரு கெட்டப் பழக்கம் இருப்பதாக ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்க நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவரின் சிஷ்யரான ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

நிகழ்ச்சியில் ரஹ்மானும், இளையராஜாவும் பேசிக் கொண்டது ரசிக்கும்படி இருந்தது.

ஹெட்மாஸ்டர்

ஹெட்மாஸ்டர்

நான் மூன்றாம் பிறை படத்தில் தான் ராஜா சாருடன் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றினேன். ரிக்கார்டிங் அறைக்குள் செல்லும்போது ஹெட்மாஸ்டர் அறைக்குள் செல்வது போன்று உணர்ந்துள்ளேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று ரஹ்மான் மேடையில் தெரிவித்தார்.

கெட்டப் பழக்கம்

கெட்டப் பழக்கம்

இசையமைப்பாளர்கள், திரையுலகினருக்கு கெட்டப்பழக்கங்கள் இருக்கும். ஆனால் ராஜா சாரிடம் எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அவரிடம் இருந்து இந்த நல்ல பழக்கத்தை நான் கற்றுக் கொண்டேன். எனக்கும், ராஜா சாருக்கும் இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் இசை மட்டும் தான் என்றார் ரஹ்மான்.

பாராட்டு

பாராட்டு

நான் விருது பெற்றதும் ராஜா சார் எனும் மேதை என்னை பாராட்டியபோது நான் நெகிழ்ந்துவிட்டேன். யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். பாராட்டுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் ஒரு இசை மேதை பாராட்டுவது ஆத்மார்த்தமானது. அதனால் ராஜா சார் பாராட்டியதை நான் என்றுமே மறக்க மாட்டேன் என்று ரஹ்மான் கூறினார்.

ரஹ்மான்

ரஹ்மான்

ரஹ்மான் தனது குரு இளையராஜா போன்று எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் உள்ளார். மூளை வேலை செய்யவில்லை தம்மடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ரஹ்மான் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருப்பது இளையராஜாவால் என்பது தெரிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X