Ilayaraja 75: இதெல்லாம் நீ சொல்லணும்: ரஹ்மானிடம் இளையராஜா செல்லக் கோபம்

By Siva

Recommended Video

Ilayaraja 75: இளையராஜா-ஏ.ஆர். ரஹ்மான் மேடை தருணங்கள்- வீடியோ

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ரஹ்மானிடம் செல்லக் கோபம் கொண்டார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் ராஜா சாரும், ரஹ்மானும் பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாது.

விழா மேடையில் இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும்.

ரஹ்மான்

ரஹ்மான்

சின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டார். ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா.

அப்பா

அப்பா

அப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா ரஹ்மானை பார்த்து கேட்க அவரும் ஆமாம் சார் என்றார். இதை எல்லாம் நீ சொல்லணும் ஆனால் நீ சொல்ல வேண்டியதை எல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று இளையராஜா கூற அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினார்கள்.

சிரிப்பு

சிரிப்பு

விழா மேடையில் இளையராஜா செல்லக் கோபம் கொண்டதை பார்த்த ரஹ்மானுக்கு மகிழ்ச்சி. குரு தன்னை உரிமையுடன் கேள்வி கேட்பது, திட்டுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது போன்று. அவர் முகத்தில் ஒரே வெட்கம் வேறு.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இளையராஜா, ரஹ்மான் மேடையில் பேசிக் கொண்டதையும், ராஜா சார் திட்டியதையும், இசைப்புயல் திட்டு வாங்கியதையும் பார்த்து ரசித்தவர்களே அதிகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X