Ilaiyaraaja 75: மேடையில் ரஹ்மானை செல்லமாக திட்டிய இளையராஜா- வீடியோ இதோ
Recommended Video

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ஏ.ஆர். ரஹ்மானை செல்லமாக கடிந்து கொண்டது ரசிக்கும்படி இருந்தது.
இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் இளையராஜா 75 நிகழ்ச்சி நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு கீ போர்டு வாசித்ததுடன் பாடியதும் மறக்கவே முடியாது.
அதிலும் குறிப்பாக புன்னகை மன்னன் பட தீம் மியூசிக்கை ரஹ்மான் வாசித்தது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
ரஹ்மான்
ரஹ்மான் கீ போர்டு வாசிக்க இளையராஜா மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை பாடினார். திடீர் என்று பாடுவதை நிறுத்திவிட்டு அங்கு எப்படி ஏ நோட் வாசிக்கிற, உனக்கு டியூன் தெரிந்திருக்கணும்ல என்று செல்லமாக திட்ட ரஹ்மான் சிரிக்க அரங்கம் முழுவதும் சிரிப்பொலி.

சுகம்
ஏ.ஆர். ரஹ்மான் என்ன தான் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டாலும் தனது குரு திட்டியதை கேட்டு சிரிக்கத் தான் செய்தார். பல ஆண்டுகள் கழித்து குருவிடம் திட்டு வாங்குவது கூட ஒரு சுகம் தான் என்பது ரஹ்மானுக்கு தெரியாதா என்ன?
வீடியோ
இந்த வீடியோவை தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பார்ப்பதுடன் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அரிய காட்சியாச்சே!
சிஷ்யர்
33 ஆண்டுகள் கழித்து ரஹ்மான் தனது குருவுடன் சேர்ந்து மேடை ஏறியது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!


Click it and Unblock the Notifications











