Ilaiyaraaja: இளையராஜா இல்லைன்னா படமே வேண்டாம்... ஒற்றைக் காலில் நின்ற பிரபல இயக்குநர்!

சென்னை: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இளையராஜா இசையமைத்தால் மட்டுமே படம் இயக்குவேன் என ஒற்றைக் காலில் நின்றுள்ளார் பிரபல இயக்குநர் ஒருவர்.

 Ilaiyaraaja: A throwback story by director Fazil who has only worked with Ilaiyaraaja

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபஹத் பாசிலின் தந்தையான இயக்குநர் பாசில் தான் அவர் என தெரியவந்துள்ளது.

இளையராஜா இல்லைன்னா படமே வேண்டாம்: தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருபவர் ஃபஹத் பாசில். அவரது தந்தையான பாசில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் உட்பட தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ளார். 1980ம் ஆண்டு மஞ்சில் விரிஞ்ச பூக்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாசில் தொடர்ந்து தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் முதன்முறையாக 1985ம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு ஆகிய பத்து படங்களை இயக்கியுள்ளார். பாசிலின் படங்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

முக்கியமாக தமிழில் பாசில் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பாசில் - இளையராஜா காம்போவில் வெளியான படங்களில் பாடல்களும் செம்ம ஹிட்டடித்தன. ஆனால், பாசில் படங்கள் இயக்கும் முன்னர் இளையராஜாவை தான் முதலில் கமிட் செய்வாராம். இளையராஜா ஓக்கே சொல்லாவிட்டால் அவர் கால்ஷீட் தரும் வரை படம் இயக்காமல் காத்திருப்பாராம் பாசில்.

அதேபோல், பாடலின் சூழலை மட்டுமே பாசில் சொல்வாராம், அதன்பிறகு இளையராஜா என்ன ட்யூன் கொடுத்தாலும் அதனை அப்படியே தனது படத்திற்காக பயன்படுத்திக் கொள்வாராம். சில நேரங்களில் இளையராஜா பாடல்கள் கொடுக்க தாமதமானால் அவர் ட்யூன் கொடுக்கும் வரை அந்த பாடல் காட்சியை எடுக்காமல் காத்திருப்பாராம் பாசில். எப்போதுமே தனது படங்களில் இளையராஜாவுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளார் பாசில்.

இளையராஜா பிஸியாக இருந்த போது பாசிலின் ஒருசில படங்களுக்கு இசையமைக்க நேரமில்லை என கூறியுள்ளார். ஆனால், "நீங்கள் இல்லாமல் படம் இயக்குவதாக இல்லை, ஃப்ரியானதும் சொல்லுங்க வரேன்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இப்படி இளையராஜாவுக்காக ஒற்றைக் காலில் நின்றதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் பாசில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X