Ilaiyaraaja: லிரிக்ஸ் ‘அந்த மாதிரி’ இருந்தா பாட மாட்டியா..? பிரபல பாடகியை திட்டிய இளையராஜா!

சென்னை: திரைப்படங்களில் இடம்பெறும் ஒருசில பாடல்களின் வரிகள் இரட்டை அர்த்தங்களுடன் வருவதுண்டு.
முன்னணி இசையமைப்பாளர்களும் இந்த மாதிரியான பாடல்களுக்கு இசையமைப்பது வழக்கமே.
அப்படியொரு நாள் தேவா இசையில் உருவாகவிருந்த ஒரு பாடலின் லிரிக்ஸ் கொஞ்சம் மோசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதனால், பாட தயக்கம் காட்டிய பிரபல பின்னணி பாடகியை இளையராஜா ஸ்டுடியோவில் வைத்து திட்டியுள்ளார்.

Ilaiyaraaja advises Chitra who said she will not sing bad lyrics

பிரபல பாடகியை திட்டிய இளையராஜா
1980களில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சித்ரா. 44 ஆண்டுகளாக தொடர்ந்து திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வரும் சித்ரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார். 25000க்கும் மேற்பட்ட பாடல்கள், 6 தேசிய விருதுகள் உட்பட நூற்றுக்கணக்கான விருதுகளை வென்றுள்ளார்.

இளையராஜா, தேவா, ஏஆர் ரஹ்மான், வித்யாசகர், பரத்வாஜ், யுவன் என சித்ரா பாடாத இசையமைப்பாளர்களே கிடையாது எனலாம். எப்போதும் அமைதியாகவும் சிரித்த முகத்துடன் காணப்படும் சித்ரா, தற்போதும் பிஸியாகவே வலம் வருகிறார். இந்நிலையில், இவரை இளையராஜா ஒருமுறை ரொம்ப கோபத்துடன் அட்வைஸ் செய்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாடகி சித்ராவே சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது தேனிசைத் தென்றால் தேவா ஒரு பாடலுக்காக சித்ராவை அழைத்துள்ளாராம். அந்தப் பாடலை எஸ்பிபி சாரும் பாட இருந்த நிலையில், அவர் முடியாது எனக் கூறிவிட்டு உடனே கிளம்பிவிட்டாராம். ஆனால் சித்ராவால் அப்படி சொல்ல முடியாமல் ரொம்பவே சங்கடமாக உணர்ந்துள்ளார். அதற்கான காரணமே அந்தப் பாடலில் இருந்த சில மோசமான வரிகள் தானாம்.

Ilaiyaraaja advises Chitra who said she will not sing bad lyrics

அதனால், தேவாவிடம், "சார் இந்த ஒரு லைன் மட்டும் மாற்றித் தர முடியுமா, இது ரொம்ப வல்கரா இருக்கு" என கேட்டுள்ளார். சித்ராவின் நிலையை புரிந்துகொண்ட தேவா, "சரிமா மாற்றி தருகிறேன், அதனால் இப்போது இந்தப் பாடலை ரிக்கார்ட் செய்ய வேண்டாம். இன்னொரு நாள் சொல்றேன், நீங்க அப்போ வந்தா போதும்" எனக் கூறியுள்ளார். ஆனால், அதன்பிறகு அந்தப் பாடல் பாட சித்ராவை கூப்பிடவே இல்லையாம் தேவா.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார் சித்ரா. அப்போது அவர் என்னை அழைத்து தேவா சார் ஸ்டூடியோவில் பாட முடியாது என சொன்னியா என என்னிடம் கேட்டார். அதற்கு நானும் ஆமாம் என்றதோடு, பாடல் வரிகள் கொஞம்சம் வல்கராக இருந்ததால் தான் அப்படி சொன்னேன் என பதிலளித்துள்ளார். உடனே டென்ஷனான இளையராஜா, லிரிக்ஸ் எப்படி இருந்தா உனக்கு என்ன... நீங்க ஏன் அதெல்லாம் பாக்குறீங்க என கோபத்துடன் கேட்டுள்ளார்.

மேலும், பாடுறது மட்டும் தான் உங்க வேலை, எந்த கவிஞரும் வேண்டுமென்றே அப்படியான வரிகளில் எழுதமாட்டார்கள். கதைக்கு தேவையானதை தான் எழுதுவார்கள். அவர்கள் எழுதித் தருவதை பாடுவது தான் உன் வேலை என உரிமையோடு திட்டியுள்ளார். அப்போது தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்துகொண்டதாக சித்ரா மனம் திறந்துள்ளார். சிங்கர் சித்ராவின் இந்தப் பேட்டி இளையராஜா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X