»   »  மழை வெள்ள பாதிப்பில் மக்கள் இருக்கும்போது எனக்கெதற்கு பாராட்டு விழா?- இளையராஜா

மழை வெள்ள பாதிப்பில் மக்கள் இருக்கும்போது எனக்கெதற்கு பாராட்டு விழா?- இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரம் படங்கள்... அதுவும் தனி இசையமைப்பாளர் - பின்னணி இசைக் கோர்ப்பாளராக... யாரால் செய்ய முடியும் இந்த பெரும் சாதனையை, இளையராஜாவைத் தவிர!

உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என மேலை நாடுகளும் வியக்கும் இளையராஜா இசையமைத்துள்ள ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை. பாலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

Ilaiyaraaja advises Thaarai Thappattai crew to avoid lavish function

1000 படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட விழா எடுத்து தாரை தப்பட்டை இசையை வெளியிட வேண்டும் என்று படக்குழுவும், இசையை வெளியிடும் சத்யம் குழுமமும் பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

டிசம்பர் 17-ம் தேதி இசை வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும் மழை, வெள்ள பாதிப்பு என மக்கள் படும் துயரங்களைப் பார்த்த இளையராஜா, 'இப்படியொரு சூழலில் பிரமாண்ட விழா, பாராட்டு விழா எல்லாம் தேவையா... இவை எதுவுமே வேண்டாம். ஆடம்பரமில்லாமல், அமைதியாக இசை வெளியீட்டை நடத்துங்கள்," என இயக்குநர் பாலாவிடம் கூறிவிட்டாராம்.

எனவே எளியமுறையில் வெளியாகிறது இளையராஜாவின் 1000வது பட இசை வெளியீடு.

English summary
Music Director Ilaiyaraaja has advised Thaarai Thappattai crew to avoid lavish function and felicitation for his 1000th album Thaarai Thappattai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil