Ilaiyaraaja: பலவருட கனவு... அல்போன்ஸ் புத்ரனுக்கு இளையராஜா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

சென்னை: நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன்.

இவரது இயக்கத்தில் பிரேமம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான 'கோல்டு' திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் பலவருட கனவை நனவாக்கி வைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

 Ilaiyaraaja: Alphonse Puthren’s Next Film Titled As Gift with Ilaiyaraaja musical

அல்போன்ஸ் புத்ரனுக்கு இளையராஜா கொடுத்த கிஃப்ட்:'நேரம்' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். நிவின் பாலி, நஸ்ரியா நஸிம், நாசர், பாபி சிம்ஹா, சார்லி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் இயக்கிய பிரேமம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இரண்டே படங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்ட அல்போன்ஸ் புத்ரன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'கோல்டு' என்ற படத்தை இயக்கினார். பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கோல்டு மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால், அல்போன்ஸ் புத்ரன் ரொம்பவே விரக்தியான மனநிலையில் காணப்பட்டார்.

இதனிடையே ஃபஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் 'பாட்டு' என்ற படம் இயக்கவும் பிளான் செய்திருந்தார். ஆனால், அந்தப் படம் ஷூட்டிங் போகாமலேயே ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் படத்தை இயக்க வேண்டும் எனவும் ரொம்பவே ஆர்வமாக இருந்தார். ஆனால், அல்போன்ஸின் இந்த ஆசையும் நிறைவேற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரனை கூல் செய்துள்ளார் இளையராஜா.

 Ilaiyaraaja: Alphonse Puthren’s Next Film Titled As Gift with Ilaiyaraaja musical

கோல்டு படத்தை தொடர்ந்து தனது அடுத்த மூவி குறித்து அபிஸியலாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். அதன்படி, 'கிஃப்ட்' என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், கோவை சரளா இருவரும் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். முக்கியமாக இப்படத்திற்கு இசைஞானி இசையமைக்கவுள்ளார். இளையராஜாவின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்ரனுக்கு இது செம்ம கிஃப்ட்டாக அமைந்துள்ளது.

இதுவரை அல்போன்ஸ் இயக்கிய படங்களுக்கு ராஜேஷ் முருகேசன் என்பவர் தான் இசையமைத்துள்ளார். சென்னை பையனாகிய ராஜேஷ் முருகேசன்- அல்போன்ஸ் காம்போ மலையாள ரசிகர்களை மயக்கி வந்தது. இந்நிலையில் கிஃப்ட் படத்திற்காக முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார் அல்போன்ஸ். மேலும், இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெறும் எனவும் அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் கிஃப்ட், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X