இன்றைய இயக்குநர்கள் யாருக்கும் இளையராஜாவிடம் இசை கேட்டு வாங்கும் தகுதி இல்லை! - பாலா

By Shankar

இன்றைய இயக்குநர்கள் யாருக்கும் இளையராஜாவிடம் இசையைக் கேட்டு வாங்கும் தகுதி இல்லை என்று இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள எல்வி பிரசாத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மைய மாணவர்களுக்காக திரைப்படத்தின் பின்னணி இசை குறித்த உரையாடல் நடந்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாலா பங்கேற்றனர்.

அப்போது இயக்குநர் பாலாவிடம் இளையராஜா இவ்வாறு கேள்வி எழுப்பினார்:

Ilaiyaraaja - Bala conversation at Prasad Film institute

ஒரு நடிகரிடம் க்ளோசப் காட்சியில் ஒரு உணர்வைச் சொல்லி நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்டார் ராஜா.

அதற்கு பதிலளித்த பாலா, "ஓரளவுக்குத்தான் நான் வாங்க முடியும். சில நடிகர்களுக்கு உங்களுடைய நத்திங் பட் விண்ட் மாதிரியான இசையை ஒலிக்கவிட்டு, அதற்கு நடித்துக் காட்டச் சொல்லி படமாக்கியிருக்கிறேன். அப்படி எடுத்த காட்சிக்கு உங்கள் பின்னணி இசை சேர்ந்ததும் அந்த நடிப்பு இன்னும் உணர்வுப்பூர்வமாகத் தெரியும்.

உங்களிடம் இசை கேட்டு வாங்குவதற்கு இன்றைக்குள்ள இயக்குநர்கள் யாருக்கும் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் கே விஸ்வநாத். அவருக்கு இருப்பதாக நினைக்கிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X